For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடையில் அதிகம் வெளிவரும் வியர்வையைக் கட்டுப்படுத்தும் ஃபேஸ் பேக்குகள்!!!

By Maha
|

கோடைக்காலத்தில் அதிக அளவில் வியர்வை வெளிவரும். வியர்வை அதிகம் வெளிவந்தால், அவை துர்நாற்றத்தை ஏற்படுத்தி, சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தும். அதிலும் வீட்டை விட்டு வெளியே வந்ததும், முகத்தில் இருந்து வியர்வை வழிந்தால், மேக்கப் போட்டதே வீணாகிவிடும்.

ஆகவே முகத்தில் அதிக அளவில் வியர்வை வெளிவராமல் இருக்கவும், சூரிய கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும், முகத்தில் ஃபேஸ் பேக் போடுவது அவசியம்.

இங்கு கோடையில் அதிக அளவில் வியர்வை வராமல் இருக்கவும், முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படவும் ஒருசில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்று படித்து தெரிந்து, அவற்றை முடிந்தால் தினமும் போட்டு வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர்

முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர்

முல்தானி மெட்டி பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 1/2 மணிநேரம் உலர வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

பால் மற்றும் தேன்

பால் மற்றும் தேன்

பால் சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் வெளியேற்றும். தேன் சருமத்தின் மென்மையை அதிகரித்து, சுருக்கத்தைத் தடுக்கும். அதற்கு இவ்விரண்டையும் ஒன்றாக கலந்து, சருமத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

வெள்ளரிக்காய் பேஸ்ட்

வெள்ளரிக்காய் பேஸ்ட்

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமம் குளிர்ச்சியுடன் இருக்கும். அதற்கு வெள்ளரிக்காயை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

கற்றாழை பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தருகிறது. அதிலும் வெயிலால் சருமத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்பைத் தடுக்கும். அதற்கு கற்றாழை ஜெல்லை சருமத்தில் தினமும் தடவி உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

வாழைப்பழம் மற்றும் தேன்

வாழைப்பழம் மற்றும் தேன்

வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து வந்தால், சருமம் குளிர்ச்சியடைந்து, கோடையில் கூட அழகாக காணப்படலாம்.

முட்டை மற்றும் மஞ்சள்

முட்டை மற்றும் மஞ்சள்

முட்டையின் வெள்ளைக்கருவோடு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்தால், சருமம் குளிர்ச்சியுடன், எவ்வித பிரச்சனையும் இல்லாமல் முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

எலுமிச்சை மற்றும் தேன்

எலுமிச்சை மற்றும் தேன்

எலுமிச்சை சாறு மற்றும் தேனை 1:2 என்ற விகிதத்தில் கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்து, வேண்டிய நேரம் அதனை எடுத்து, சருமத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, முகம் புத்துணர்ச்சியுடன் வியர்வையின்றி காணப்படும்.

கடுகு மற்றும் ரோஸ் வாட்டர்

கடுகு மற்றும் ரோஸ் வாட்டர்

கடுகை அரைத்து அதனை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி உலர வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Face Masks To Prevent Sweat In Summer

Here are the list of face masks that help you prevent sweat in summer. Try these simple face masks and get rid of sweat in summer. Take a look.
Story first published: Wednesday, April 22, 2015, 15:51 [IST]
Desktop Bottom Promotion