பரு இல்லாத சருமம் வேண்டுமா? இந்த முறையை ஃபாலோ பண்ணுங்க...

Posted By:
Subscribe to Boldsky

பொலிவான சருமத்தைப் பெற எத்தனை வழிகளை தேடினாலும், இயற்கை முறைப்படி சருமத்தைப் பராமரித்தால், அதனால் கிடைக்கும் நன்மையானது நிரந்தரமாக கிடைப்பதோடு, சருமமும் நன்கு ஆரோக்கியமாக பொலிவோடு இருக்கும். அதிலும் முகப்பரு உள்ளவர்கள் அதனைப் போக்குவதற்கு பல வழிமுறைகளை பின்பற்றியிருப்பார்கள். இருப்பினும் அவற்றில் சில எந்த ஒரு பலனையும் தந்திருக்காது.

ஆனால் தேன் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் உள்ள பல பிரச்சனைகளைப் போக்கலாம். சரி, சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு என்ன காரணம் இருக்கும் என்று தெரியுமா? அது வேறொன்றும் இல்லை, உண்ணும் உணவுகளும், சுற்றுச்சூழலும், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையும் தான் சருமத்தின் அழகையே கெடுக்கின்றன.

10 நாட்களில் நல்ல பொலிவான மற்றும் அழகான சருமம் வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...

எனவே சருமத்தின் அழகைப் பராமரிக்க தேனைக் கொண்டு பராமரித்தால், சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைப் போக்கி சருமத்தை பொலிவோடு, குறிப்பாக பருக்களின்றி வைத்துக் கொள்ளலாம். சரி, இப்போது தேனைக் கொண்டு செய்யக்கூடிய சில ஃபேஸ் பேக்குகளைப் பார்ப்போமா!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேனுடன் பாதாம் மற்றும் எலுமிச்சை

தேனுடன் பாதாம் மற்றும் எலுமிச்சை

பாதாமை பொடி செய்து, அதில் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

தேனுடன் உப்பு அல்லது சர்க்கரை

தேனுடன் உப்பு அல்லது சர்க்கரை

3 டேபிள் ஸ்பூன் தேனுடன், 1/2 டீஸ்பூன் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து கலந்து முகத்தில் மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

எலுமிச்சை மற்றும் தேன் ஃபேஸ் பேக்

எலுமிச்சை மற்றும் தேன் ஃபேஸ் பேக்

இது மிகவும் சூப்பரான ஒரு ஃபேஸ் பேக். ஏனெனில் இது சருமத்தில் உள்ள பருக்களை போக்குவதுடன், சருமத்தில் உள்ள தழும்புகளையும் மறையச் செய்யும். அதற்கு தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் முகத்தை நீரில் நன்னு அலசி, பின் அதனை சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, அலச வேண்டும்.

சந்தனம் மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க்

சந்தனம் மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க்

தேனுடன் சந்தன பவுடர் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தைக் கழுவிய பின், கலந்து வைத்துள்ள கலவையை சருமத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் தேன் மற்றும் சந்தன பவுடர் சருமத்தில் உள்ள பருக்களை போக்கி, தழும்புகள் இருந்தாலும் மறையச் செய்துவிடும்.

ஓட்ஸ் உடன் தேன்

ஓட்ஸ் உடன் தேன்

தேன் ஃபேஸ் பேக்கிலேயே ஒரு சிறப்பான மற்றொரு ஃபேஸ் பேக் என்றால், அது ஓட்ஸ் மற்றும் தேனை ஒன்றாக கலந்து சருமத்தை ஸ்கரப் செய்வது தான். அப்படி ஸ்கரப் செய்து சருமத்தை கழுவிய பின்னர், துணியால் நன்கு துடைத்தால் சருமம் மென்மையாக இருப்பதை காணலாம்.

தேன் மற்றும் மூல்தானி மெட்டி

தேன் மற்றும் மூல்தானி மெட்டி

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், இந்த முறையை பின்பற்றுவது நல்லது. அதற்கு மூல்தானி மெட்டி பொடியை தேன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதனால் மூல்தானி மெட்டியானது சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கும். தேன் சருமத்தில் வறட்சி ஏற்படாமல் தடுக்கும்.

தேனுடன் பால் மற்றும் வெள்ளரிக்காய்

தேனுடன் பால் மற்றும் வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை துருவி, தேன் மற்றும் பால் சேர்த்து கலந்து, அதனை எண்ணெய் பசையுள்ளவர்கள் தங்களது சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், அது சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை போக்குவதோடு, வறட்சியடையாமலும் பார்த்துக் கொள்ளும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best Face Packs Using Honey

The best honey face mask will give you glowing radiant skin. These honey face packs for acne scars will leave your skin flawless. Read on to know the best honey face masks for acne.
Story first published: Monday, February 10, 2014, 11:18 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter