சருமத்தின் அழகைக் கெடுக்கும் சில கெட்ட பழக்கவழக்கங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் நல்ல பழக்கம், கெட்ட பழக்கம் என இரண்டும் இருக்கும். நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கும். அதுவே தீய பழக்கவழக்கங்கள் இருந்தால், அதனை நிச்சயம் மாற்ற வேண்டும். மேலும் இவ்வுலகில் நல்ல பழக்கங்களை பின்பற்றுபவர்களை விட, தீய பழக்கங்களை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் உள்ளது.

இப்படி தீய பழக்கங்களை மாற்ற முயற்சிக்காமல் இருந்தால், அந்த தீய பழக்கங்களானது உடலின் ஆரோக்கியத்தைக் கெடுப்பதுடன், சருமத்தின் அழகையும் கெடுக்கும். மேலும் அந்த தீய பழக்கவழக்கங்கள் அனைத்தும் சாதாரணமாக அனைவரும் அன்றாடம் மேற்கொள்ளும் சிறுசிறு செயல்கள் தான். ஆனால் சிலருக்கு அந்த பழக்கங்கள் ஆரோக்கியமற்றது என்று தெரியாது.

பளபளப்பான சருமத்தைப் பெற நிச்சயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!

அது என்னவென்று கேட்கிறீர்களா? அதைத் தான் இங்கு பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, அந்த பழக்கம் உங்களுக்கு இருந்தால், உடனே அதனை மாற்றிவிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தண்ணீர் குறைவாக குடிப்பது

தண்ணீர் குறைவாக குடிப்பது

தண்ணீர் அதிகம் குடிப்பதால், சருமம் பொலிவோடும் வறட்சியின்றியும் இருக்கும். ஆனால் சிலருக்கு தண்ணீர் குடிக்க பிடிக்காது என்பதை விட, தண்ணீர் குடிக்க நேரம் ஒதுக்காமல் வேலை செய்கிறார்கள். அப்படி செய்வதால், சருமத்தின் அழகு தான் பாழாகும். எனவே தினமும் போதிய அளவு தண்ணீர் பருக வேண்டும்.

எப்போதும் சிடுசிடுவென்று இருப்பது

எப்போதும் சிடுசிடுவென்று இருப்பது

புன்னகையுடன் இல்லாமல், சிடுசிடுவென்று இருந்தால், சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும். எனவே எப்போதும் சிரித்து சந்தோஷமாக இருங்கள்.

புகைப்பிடிப்பது

புகைப்பிடிப்பது

புகைப்பிடித்தால் உடலில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, சருமத்தில் விரைவில் முதுமை தோற்றம் ஏற்படுவதோடு, ஆங்காங்கு வெள்ளைத்திட்டுக்கள் காணப்படும். எனவே புகைப்பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

சன்ஸ்கிரீன் லோசனை தவிர்ப்பது

சன்ஸ்கிரீன் லோசனை தவிர்ப்பது

வெளியே செல்லும் போது, சூரியனின் புறஊதாக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து சருமத்திற்கு போதிய பாதுகாப்பைத் தரும் சன்ஸ்கிரீன் லோசனை தடவாமல் செல்வதால், சருமத்தின் நிறம் மாறுவதோடு, சுருக்கங்களும் ஏற்படும். ஆகவே எப்போதும் வெளியே செல்லும் போது சன்ஸ்கிரீன் லோசனை தடவி செல்லுங்கள்.

கரும்புள்ளிகளை பிய்த்து எடுப்பது

கரும்புள்ளிகளை பிய்த்து எடுப்பது

சிலருக்கு முகத்தில் கரும்புள்ளிகள் வந்தால், அதனை உடனே கையால் பிய்த்து எரிந்துவிட வேண்டும். ஆனால் அப்படி செய்தால் சருமத்தில் தழும்புகள் தான் ஏற்படும்.

அளவுக்கு அதிகமாக ஸ்கரப் செய்வது

அளவுக்கு அதிகமாக ஸ்கரப் செய்வது

சிலர் சருமத்தை பராமரிக்கிறேன் என்ற பெயரில் தினமும் சருமத்தை ஸ்கரப் செய்வார்கள். அப்படி செய்தால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசையானது முற்றிலும் நீங்கி, பின் அதுவே பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

டோனர் பயன்படுத்தாமல் இருப்பது

டோனர் பயன்படுத்தாமல் இருப்பது

ஸ்கரப் செய்த பின்னர், சிலர் டோனரான பால், ரோஸ் வாட்டர் போன்றவற்றைக் கொண்டு சருமத்தை துடைக்க மறந்துவிடுவார்கள். அப்படி மறந்தால், பின் சருமத்துளைகளானது பெரிதாகி, அதிகப்படியான எண்ணெய் வெளிவந்து, முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவை அதிகம் வர ஆரம்பித்துவிடும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடாமல் இருப்பது

பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடாமல் இருப்பது

சிலர் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடமாட்டார்கள். ஆனால் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடுவதன் மூலமும், சருமத்தின் அழகை பராமரிக்கலாம். ஏனெனில் அதில் உள்ள சத்துக்கள், சரும செல்களுக்கு புத்துணர்வூட்டி, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும்.

போதிய தூக்கமில்லாமை

போதிய தூக்கமில்லாமை

தற்போது அனைவருக்குமே அழகின் மீது அக்கறை உள்ளது. ஆனால் அந்த அழகை பராமரிக்கும் விதம் தான் சரியில்லை. ஆம், சருமத்தை பொருட்களை கொண்டு பராமரித்தால் மட்டும் போதாது, இரவு நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதனால் கருவளையம், பொலிவிழந்த சருமம் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

அளவுக்கு அதிகமாக குடிப்பது

அளவுக்கு அதிகமாக குடிப்பது

அளவாக குடிப்பது தான், உடல் மற்றும் சருமத்திற்கு நல்லது. ஆனால் அது அளவுக்கு மீறினால், அதுவே அழகையும், ஆரோக்கியத்தையும் பாதித்துவிடும்.

ஜங்க் உணவுகளை உட்கொள்வது

ஜங்க் உணவுகளை உட்கொள்வது

ஜங்க் உணவுகளில் கொழுப்புக்கள் மற்றும் டாக்ஸின்கள் அதிகம் உள்ளது. ஆகவே நல்ல அழகான சருமம் வேண்டுமானால், ஜங்க் உணவுகளை உட்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மோசமான மேக் அப்

மோசமான மேக் அப்

அளவுக்கு அதிகமாக, தரம் குறைவான மேக் அப் பொருட்களைப் பயன்படுத்தினால், அது சருமத்துளைகளில் அடைப்பை ஏற்படுத்தி, பின் சருமத்தை கடினமான மாற்றி, அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். எனவே எப்போதும் நல்ல தரமான மேக் அப் பொருட்களை அளவாக பயன்படுத்த வேண்டும்.

மொபைல் அதிகம் பயன்படுத்துவது

மொபைல் அதிகம் பயன்படுத்துவது

எப்போதும் மொபைலும் கையுமாக இருந்தால், அதில் இருந்து வெளிவரும் கதிர்கள், சரும செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, அழகை பாழாக்கும். எனவே அளவாக மொபைல் பயன்படுத்துவதுடன், ஹெட் போனை பயன்படுத்த வேண்டும்.

இரவில் முகத்தை கழுவாமல் இருப்பது

இரவில் முகத்தை கழுவாமல் இருப்பது

நாள் முழுவதும் வெளியே சுற்றிவிட்டு, இரவில் படுக்கும் போது, அசதியில் சிலர் முகத்தை கழுவாமல் தூங்குவார்கள். இப்படி தூங்குவதால், சருமத்தில் உள்ள அழுக்குகளானது படிந்து, பின் முகப்பரு மற்றும் இதர சரும பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். எனவே இரவில் எப்போதும் தவறாமல் முகத்தை கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

14 Bad Skin Habits You Should Quit

If you want to get glowing skin, then you have to start changing your habits now. And the very beginning of your beauty regime should be to get rid of the bad skin habits that you have. You may not even be aware that some of your activities are bad for your skin. So here is a list of the bad skin habits that you need to get rid of right away.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter