Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
மூக்குக்கு மேல வெள்ளையா, சொரசொரன்னு அசிங்கமா இருக்கா? இத ட்ரை பண்ணுங்க...
முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் வெள்ளைப் புள்ளிகள். குறிப்பாக இளம் பருவத்தினர் தான், இந்த பிரச்சனைக்கு பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அதிலும் இந்த வெள்ளைப் புள்ளியானது முகத்தில் மூக்கு, தாடை போன்ற இடங்களில் தான் அதிகம் காணப்படும். சிலருக்கு இந்த வெள்ளைப் புள்ளியானது அதிகம் இருந்து தொல்லை கொடுப்பதோடு, மேக் அப் போட்டாலும் எளிதில் போக்கி, முகத்தின் பொலிவை பாழாக்கிவிடும். எனவே பலர் அதனைப் போக்குவதற்கு நிறைய பணம் செலவழித்து, பல சிகிச்சைகளை மேற்கொள்வார்கள்.
ஆனால் அதனைப் போக்க அப்படி பணம் செலவழிப்பதற்கு பதிலாக, அப்போது சில இயற்கை சிகிச்சைகளைப் பின்பற்றுங்கள். அதிலும் வீட்டின் சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டு நீக்குமளவில் ஏதேனும் சிகிச்சை உள்ளதா என்று தேடுங்கள். இதனால் வெள்ளைப் புள்ளிகளை எளிதில் நீக்கலாம். அதுமட்டுமின்றி, இப்படி இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தினால், சீக்கிரம் வெள்ளைப் புள்ளிகள் போய்விடும். சரி, இப்போது வெள்ளைப் புள்ளிகளைப் போக்க உதவும் பொருட்களைப் பார்ப்போமா!!!

வெந்தயம்
ஒரு கையளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, அதில் தண்ணீர் ஊற்றி கெட்டியான பேஸ்ட் போல் அரைத்து, பின் அதனை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால், வெள்ளைப் புள்ளிகள் மாயமாக மறைந்துவிடும்.

சோளம்
வெள்ளைப் புள்ளிகளை போக்குவதில் சோளம் மிகச்சிறந்தது. அதற்கு சோளத்தை வினிகர் சேர்த்து அரைத்து, அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரினால் மசாஜ் செய்தவாறு கழுவ வேண்டும்.

சர்க்கரை-தேன் ஸ்கரப்
வெள்ளைப் புள்ளிகளைப் போக்குவதில் சர்க்கரை மற்றும் தேனை விட சிறந்த பொருள் எதுவும் இருக்க முடியாது. எனவே தேனில் சிறிது சர்க்கரை சேர்த்து, அந்த கலவையைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் சாதாரண நீரில் கழுவ வேண்டும். இதனால் வெள்ளைப் புள்ளிகள் சீக்கிரம் போய்விடும்.

நாட்டுச்சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில்
நாட்டுச்சர்க்கரையில் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை 10 நிமிடம் மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

கடலை மாவு ஸ்கரப்
ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பை மென்மையாக அரைக்காமல் ஓரளவு அரைத்து, பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இதனாலும் வெள்ளைப் புள்ளியில் இருந்து விடுபடலாம்.

சந்தனப் பொடி
1 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடியில், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, கெட்டியான பேஸ்ட் போல் கலந்து, பின் முகத்தில் தடவி 15 நிமிடம் ஸ்கரப் செய்து கழுவினால், வெள்ளைப் புள்ளிகள் போய்விடும்.

பாதாம் மற்றும் பால் ஸ்கரப்
இரவில் படுக்கும் போது 5-6 பாதாமை 2 டேபிள் ஸ்பூன் பாலில் ஊற வைத்து, பின் அதனை காலையில் எழுந்து அரைத்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், வெள்ளைப் புள்ளிகள் நீங்குவதோடு, சருமமும் பொலிவோடு இருக்கும்.



Click it and Unblock the Notifications
