Latest Updates
-
கமகமக்கும்.. செட்டிநாடு நண்டு மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவிலேயே அதிக மொழிகள் பேசப்படும் நகரம் எது தெரியுமா? எத்தனை மொழினு தெரிஞ்சா நம்பவே மாட்டிங்க -
சுகர், எடை குறைப்புக்கு உதவும் GLP-1 மருந்துகளால் பார்வை பறிபோகுமா? மருத்துவ ஆய்வுகள் கூறும் பகீர் உண்மைகள்! -
ஆந்திரா ஸ்டைல் கோங்குரா புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க -வித்தியாசமா செமையா இருக்கும் -
தங்கம் ஏன் மஞ்சள் நிறத்தில் மட்டும் இருக்கிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சுக்ராதித்ய யோகத்தால் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்.. பண மழை கொட்டும்.. -
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா?
பருக்களால் ஏற்படும் சரும பாதிப்புகளுக்கான சிறந்த தீர்வுகள்!!!
காலங்கள் மாறிவரும் போது நமது சருமமும் அதற்கு தகுந்தாற்போல் மாறத் துவங்கும். இதனால் நாம் நமது சருமத்தை காலத்திற்கு ஏற்றாற் போல் பராமரிக்க வேண்டும். வெயில் காலங்களில் நமது சருமம் சீக்கிரமாக வாடிவிடும் அதேபோல் மழைக்காலங்களில் வறண்டு காணப்படும். இதனால் ஏற்படும் சரும நோய்களில் இருந்து விடுபட நாம் கடைகளில் கிடைக்கும் கிரீம்களையும் லோஷன்களையும் மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்பது கிடையாது. வீட்டிலேயே எளிய முறையில் அன்றாடம் நாம் உபயோகிக்கும் பொருட்களைக் கொண்டே பராமரிக்கலாம்.
நீங்கள் அதிர்ஷ்டம் இல்லதவாராக இருந்தால்தான் உங்கள் சருமத்தில் வெடிப்புகள் ஏற்பட்டு முகம் முழுவதும் பருக்கள் வரத் தொடங்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இந்த சரும பாதிப்புகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது மனஅழுத்தம் மன நோய் போன்றவைகள் தான் ஆகும். சர்க்கரை மற்றும் சீஸ் வகைகளான சாக்லெட்களும் அழுக்கு சேர்தல் போன்றவையும் காரணமாக இருக்கலாம். உங்கள் அழகான முகத்தில் பருக்கள் நிரம்பி வழிந்தால் உங்கள் வாழ்வே சோகமாகி விட்டது போன்ற உணர்வு ஏற்படும். இது மட்டுமல்லாது பருக்கள் ஏற்படும் தழும்புகள் இதை விட கொடுமையானவைகளாக இருக்கும். மேலும் அவை வருத்தப்படச் செய்யும்.
உங்கள் சருமம் தான் உங்களது உற்ற நண்பன். ஆதலால், சருமத்தை சிறந்த வழியில் கவனமாக பாதுகாக்க வேண்டும். உங்கள் சருமத்தில் வெடிப்பு ஏற்பட்டாலோ அல்லது சிதைவு ஏற்பட்டாலோ அதனை வெறுக்கக் கூடாது. இதற்கு தீர்வு தான் என்ன? விலை உயர்ந்த க்ரீம் அல்லது இரசாயன சிகிச்சை முறையை நாடுவதா? கண்டிப்பாக இல்லை! வீட்டிலேயே சிகிச்சை செய்து இந்த சரும பாதிப்புகளுக்கு சிறந்த முறையில் தீர்வு காணலாம். உங்கள் சருமத்திற்கும் சுவாசம் உண்டு. அதனால் அதனை கவனமாக கையாள வேண்டும். பொறுமையே இதன் சாரம். இந்த சிகிச்சைகளின் பலனை அடைவதற்கு சில நாட்கள் பொறுமையாக இருக்க வேண்டும். மிகுந்த கவனத்துடன் கையாளுவதே இந்த சரும பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாகும். இங்கு பருக்களால் ஏற்படும் சரும பிரச்சனைகளை சிகிச்சை செய்வதற்கான வழிகளை படிக்கலாம்.

மசாலாப் பொருட்கள்
மசாலாப் பொருட்கள் மூலம் சரும பாதிப்புகளுக்கு தீர்வு காணலாம். ஆம்! தேன் மற்றும் பட்டையை சேர்த்து முகத்தில் பேஸ் பேக் போடலாம். இந்த தேன் மற்றும் லவங்கப்பட்டையின் கலவை சரும பாதிப்புகளுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்கும். லவங்கத்தில் உள்ள ஆண்டிபாக்டீரியல் தன்மை பாக்டீரியாக்களை அழிக்கும் மேலும் தேன் ஒரு நல்ல நோய் எதிர்ப்பு பொருளாகும். இந்த கலவையை சரும பாதிப்புகளுக்கு ஒரு சிறந்த தீர்வு என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா?

முட்டையின் வெள்ளைக்கரு
நீங்கள் முட்டை சாப்பிடுபவராக இருந்தால், முட்டையின் வெள்ளைக்கரு நமது டயட்டில் கால்சியத்தை சேர்ப்பதோடு மட்டுமல்லாது சரும பாதிப்புகளுக்கு தீர்வாக இருக்கும். முட்டை வெள்ளைக்கரு சரும பாதிப்புகளுக்கு ஒரு எளிமையான தீர்வாக இருக்கும். அதில் இருக்கும் ப்ரோடீன் மற்றும் கனிமங்கள் சரும பாதிப்பை எதிர்த்து செயல்பட்டு உங்கள் சருமத்தை மிளிரச்செய்யும். மலிவான விலையில் இந்த முறை உங்கள் சரும பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும். முட்டையின் வெள்ளைக்கருவை உங்கள் முகத்தில் சிறிது நேரம் தடவி காயவைத்து பின்னர் முகத்தை கழுவவும்.

பப்பாளியின் அதிசயம்
இன்று கடைகளில் கிடைக்கும் சரும கிரீம்களில் இருக்கும் முக்கியமான தாதுப்பொருள் பப்பாளிதான். இது உங்கள் சரும பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வை கொடுக்கும் வழிகளில் ஒன்றாகும். சிறிது பப்பாளியை மசித்து உங்கள் சருமத்தில் தடவவும். 15-20 நிமிடங்கள் காயவிடவும். வெந்நீர் கொண்டு உங்கள் முகத்தை கழுவவும். இது உங்கள் சரும பாதிப்புகளுக்கு தீர்வுகாண சிறந்த வழியாகும்.

மஞ்சள் வாழைப்பழம்
வாழைப்பழத்தை சாப்பிட்ட பின்னர் அதன் தோலை உங்கள் சருமத்தில் தடவி வந்தால் அது சரும பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும். நீங்கள் சாப்பிட்ட வாழைப்பழத் தோலை உங்கள் முகம் முழுவதும் தடவவும். 30 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவவும்.

எலுமிச்சை
அழகு பராமரிப்பு என்றாலே எலுமிச்சை இல்லாத ஒன்று எதுவும் இல்லை. இந்த எலுமிச்சை சரும பாதிப்புகளுக்கான முக்கிய தீர்வாக இருக்கிறது. வைட்டமின் சி நிறைந்துள்ள எலுமிச்சை சரும பாதிப்புகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்கும். மேலும் எலுமிச்சை உங்கள் சருமத்தை பக்குவப்படுத்தி செத்த அணுக்களை நீக்கும். சருமத்தை வெளுப்பாக்க இது உதவுவதால் உங்கள் சருமத்தை சிறந்த முறையில் பராமரிக்க உதவும். எலுமிச்சை சாற்றை உங்கள் சருமத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவவும்.

சரும புத்துணர்வு
உங்கள் சருமம் புத்துணர்வு பெறுவதற்கு சிறிது புதினா இலைகளை உபயோகியுங்கள். அது உங்கள் சரும பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும். முகத்தை நன்றாக கழுவிய பின்பு சிறிது நேரம் கழித்து புதினா சாற்றை எடுத்து முகத்தில் தடவவும். அதனை உங்கள் முகம் முழுவதிலும் தடவ வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து அது காய்ந்த பிறகு முகத்தை கழுவவும். நீங்களே அதன் வித்தியாசத்தை உணர்வீர்கள்.



Click it and Unblock the Notifications
