For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உதடுகளில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கும் நேச்சுரல் லிப் பாம்கள்!!!

By Maha
|

குளிர்காலத்தின் போது பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு உள்ளாக நேரிடும். ஏனெனில் கடுமையான குளிர் காற்றினால், சருமத்தில் உள்ள ஈரப்பசையானது போய்விடும். அதுவும் சருமத்தில் மட்டுமின்றி, உதடுகளிலும் தான். ஆகவே பலர் உதடுகளுக்கு கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த லிப் பாம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். அப்படி கடைகளில் விற்கப்படும் லிப் பாம்களை குளிர்காலம் முடியும் வரை பயன்படுத்தினால், குளிர்காலம் முடிவதற்குள் உதடுகளானது கருமையாகிவிடும்.

அதுமட்டுமின்றி, உதடுகள் மென்மையிழந்து, வெடிப்புகளுடன் அசிங்கமாக காணப்படும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை உதடுகளின் அழகைப் பாதுகாத்து, வறட்சி ஏற்படாமல் தடுக்கும் சில இயற்கையான லிப் பாம்களை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளது. அவற்றைப் படித்து பயன்படுத்தி வந்தால், உதடுகளின் வறட்சி தடுக்கப்படுவதோடு, அதன் அழகும் அதிகரித்து, உதடுகளும் மென்மையாக இருக்கும்.

சரி, இப்போது அந்த இயற்கையான லிப் பாம்கள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய் எண்ணெய் அல்லது பால்

தேங்காய் எண்ணெய் அல்லது பால்

உதடு வறட்சியைப் போக்குவதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது பாலை உதடுகளில் தடவிக் கொண்டால், வறட்சி நீங்குவதோடு, உதடுகளும் மென்மையாக இருக்கும்.

கிளிசரின்

கிளிசரின்

கடைகளில் விற்கப்படும் லிப் பாம்கள் கிளிசரின் கொண்டு தான் தயாரிக்கப்படுகிறது. ஆகவே அத்தகைய கிளிசரினை நேரடியாக உதடுகளில் தடவினால், உதட்டு வறட்சி தடுக்கப்படுவதோடு, உதடுகளும் பிங்க் நிறத்தில் மாறும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலைக் கொண்டு முகம் மற்றும் உதடுகளுக்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், சருமம் மற்றும் உதடுகளில் ஏற்படும் வறட்சி நீங்கும். மேலும் உதடுகளும் மென்மையாக இருக்கும்.

தேன்

தேன்

தேனை எலுமிச்சை சாற்றுடன் கலந்து முகத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பொலிவோடு இருக்கும். மேலும் அந்த தேனைக் கொண்டு வறட்சி ஏற்படும் உதடுகளை மசாஜ் செய்தால், உதடுகள் வறட்சி அடையாமல் இருக்கும்.

வெண்ணெய்

வெண்ணெய்

உதடு வறட்சிக்கு ஒரு சிறந்த இயற்கையான லிப் பாம் என்றால் அது வெண்ணெய். அதற்கு தினமும் படுக்கும் முன், வெண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வாருங்கள்.

நெய்

நெய்

நெய் கூட உதடுகளில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கும் சக்தி கொண்டவை. அதுமட்டுமல்லாமல், நெய்யைக் கொண்டு உதடுகளைப் பராமரித்தால், உதடுகள் மென்மையடைவதோடு, உதடுகளின் நிறமும் அதிகரிக்கும்.

மில்க் க்ரீம்

மில்க் க்ரீம்

மில்க் க்ரீம்மை உதடுகளில் தடவி வந்தால், உதட்டு வறட்சி நீங்கி, உடுகள் மென்மையாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Lip Balms For Winters

Here are some homemade lip balms for you to apply on winter. It is natural and doesn't have any side-effect. To save your lips from cracking and peeling off, take a look...
Story first published: Thursday, December 26, 2013, 13:34 [IST]
Desktop Bottom Promotion