Latest Updates
-
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன?
அது என்ன மூக்கு மேல ஒரே 'சொர சொர'?... சர்க்கரையை எடுங்க சரி பண்ணிரலாம்!
பொதுவாக சர்க்கரை ஒரு ஆரோக்கியமற்ற பொருள் என்று தான் தெரியும். ஏனெனில் சர்க்கரையை சாப்பிட்டால், உடலில் பல பிரச்சனைகளான உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதர பிரச்சனைகள் எல்லாம் ஏற்படும். ஆனால் இந்த சர்க்கரை அழகுப் பராமரிப்பில் சிறந்தப் பொருளாக உள்ளது. எப்படியெனில், சர்க்கரையைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், அது சருமத்தில் உள்ள இறந்த செல்கள், சருமத்தின் மென்மைக்கு இடையூறாக இருக்கும் கரும்புள்ளிகள், வெள்ளைப் புள்ளிகள் போன்றவற்றை எளிதில் வெளியேற்றிவிடும்.
அதற்கு சர்க்கரையை அப்படியே பயன்படுத்தலாம் அல்லது அதனை வேறு சில சரும பராமரிப்பு பொருட்களுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம். இதனால் சருமம் மென்மையாகவும், பட்டுப் போன்றும் இருக்கும். அதிலும் நாட்டுச்சர்க்கரை மற்றும் ஆலிவ் எண்ணெயை ஒன்றாக சேர்த்து கலந்து, சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமம் மிகவும் மென்மையாகிவிடும்.
அதுமட்டுமின்றி, சர்க்கரை முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடும் குணம் கொண்டவை. எப்படியெனில் சர்க்கரையைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்யும் போது, சருமத் துளைகள் திறந்து, அதிலுள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்குவதோடு, சரும செல்கள் எளிதில் பாதிக்காதவாறு பாதுகாக்கும்.
சரி, இப்போது சமையலறையில் கிடைக்கும் சர்க்கரையைக் கொண்டு எப்படியெல்லாம் சருமத்தைப் பராமரிக்கலாம் என்று பார்ப்போம்.

சர்க்கரை
அவசரமாக பார்ட்டிக்கு கிளம்பும் போது, சர்க்கரையை தண்ணீரில் கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை 3-4 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ந்த தண்ணீரில் கழுவினால், சருமம் சுத்தமாக பொலிவோடு காணப்படும்.

கிளின்சர்
கிளின்சரில் சிறிது சர்க்கரையை சேர்த்து கலந்து, ஈரமான சருமத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, ஈரமான துணியால் துடைத்து, பின் நீரில் கழுவலாம். இதனாலும் சருமம் அழகாக ஜொலிக்கும்.

எலுமிச்சை
எலுமிச்சை சாற்றில் சிறிது சர்க்கரையை சேர்த்து கலந்து, சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள், இறந்த செல்கள் முற்றிலும் நீங்கி, சருமம் பொலிவுறும்.

க்ரீன் டீ
க்ரீன் டீயில் ஆன்டி-ஏஜிங் தன்மை அதிகம் இருப்பதோடு, அது சருமத்தில் பாதிக்கப்பட்டுள்ள திசுக்களை குணமாக்கும் தன்மை கொண்டவை. ஆகவே க்ரீன் டீயில் சர்க்கரை சேர்த்து கலந்து, அதனை சருமத்தில் தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சரும சுருக்கம் நீங்கி, முதுமைத் தோற்றத்தில் இருந்து விடுபடலாம்.

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் சிறிது சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தை ஸ்கரப் செய்யலாம். வேண்டுமெனில், தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக பாதாம் எண்ணெய், ரோஸ்மேரி எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

பால்
பால் மற்றும் சர்க்கரையை ஒன்றாக கலந்து, அதில் சிறிது சந்தனப் பொடியை சேர்த்து, சருமத்தில் தடவி மென்மையாக சருமத்தை தேய்த்தால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் நீங்கிவிடுவதோடு, சருமமும் வெள்ளையாக மாறும்.

பாதாம்
பாதாமை இரவில் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து அதனை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது சர்க்கரை மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தை ஸ்கரப் செய்தாலும், சருமம் அழகாக இருக்கும்.



Click it and Unblock the Notifications