Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
சரும சுருக்கத்தைப் போக்கும் ஃபேஸ் பேக்குகள்!!!
முப்பது வயதானாலேயே சருமத்தில் ஒருவித முதுமைத் தோற்றமானது வெளிப்பட ஆரம்பிக்கும். ஏனெனில் வயதாக வயதாக சருமமானது தளர ஆரம்பித்து, சரும் சுருக்கங்களை ஏற்படுத்திவிடுகிறது. ஆகவே சருமத்தை மென்மையாகவும், சுருக்கமின்றியும் வைத்துக் கொள்ள வேண்டுமெனில், நிச்சயம் சருமத்தை முறையாக பராமரித்து வர வேண்டும். இதற்கு பல வழிகள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று தான் ஃபேஸ் பேக்.
பொதுவாக ஃபேஸ் பேக்கில் நிறைய உள்ளன. அந்த ஃபேஸ் பேக்குகளை எளிதில் வீட்டிலேயே செய்யலாம். அதிலும் ஃபேஸ் பேக்குகள் செய்வது என்பது மிகவும் எளிது. எனவே, விரைவில் முதுமை தோற்றத்தை தவிர்க்க வேண்டுமெனில், அத்தகைய முதுமைத் தோற்றத்தைத் தரும் சுருக்கங்களை போக்குவதற்கான ஃபேஸ் பேக்குகளை போட வேண்டும். அந்த ஃபேஸ் பேக்குகளில் சரும சுருக்கத்தைப் போக்கும் சில சிறந்த ஃபேஸ் பேக்குகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து முயற்சித்து பாருங்கள்.
முக்கியமாக ஃபேஸ் பேக்குகள் போட்ட பின்னர், பேசவோ அல்லது சிரிக்கவோ கூடாது. ஏனெனில் அவ்வாறு செய்தால், சரும சுருக்கங்கள் அதிகரிப்பதோடு, சருமத்தில் கோடுகள் விழ ஆரம்பிக்கும்.

முட்டை
முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி உலர வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கும்.

முல்தானி மெட்டி
முல்தானி மெட்டியை முட்டை, கிளிசரின் மற்றும் தேன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், முதுமைத் தோற்றத்தை தவிர்க்கலாம்.

தேன்
தேனை கிளிசரினுடன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 2 நிமிடம் மசாஜ் செய்து உலர வைத்து, பின்பு குளிர்ந்த நீரில் கழுவினாலும், இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்கலாம்.

பால்
பாலில் முல்தானி மெட்டி பொடியை கலந்து, முகத்தில் தடவி காய வைத்து, பின் பால் கொண்டு 10 நிமிடம் லேசாக மசாஜ் செய்து கழுவி வந்தால், சருமம் இறுக்கமடையும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

தயிர்
சரும சுருக்கத்தைப் போக்க பயன்படும் பொருட்களில் தயிரும் ஒன்று. அதுமட்டுமின்றி தயிரைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வந்தால், சருமம் மென்மையாகவும், பொலிவோடும் மாறும்.

அரிசி மாவு
அரிசி மாவில், ஆலிவ் ஆயில் மற்றம் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சரும சுருக்கங்கள் நீங்கும்.

ஆலிவ் ஆயில்
தினமும் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயிலை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், சரும இறுக்கமடைந்து முதுமை தோற்றத்தில் இருந்து விடுபடலாம்.

கற்றாழை
கற்றாழையின் ஜெல்லைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தாலும், சரும சுருக்கத்தைப் போக்கலாம். இல்லாவிட்டால், கற்றாழை ஜெல்லுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவலாம். இதனால் சருமத்தில் உள்ள மாசுக்கள் அனைத்தும் நீங்கும்.

அவகேடோ
அவகேடோவை மசித்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலரை வைத்து கழுவினால், அதில் உள்ள அவகேடோ கொலாஜனை அதிகம் உற்பத்தி செய்து, இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்கும்.

ஜிஜோபா ஆயில்
ஜிஜோபா ஆயிலை முல்தானி மெட்டியுடன் சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சரும இறுக்கமடையும்.



Click it and Unblock the Notifications