Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
ரோஜாப்பூ நிற கன்னங்கள் வேண்டுமா? ரோஸ் ஃபேஸ் பேக் போடுங்க....
பிப்ரவரி மாதத்தின் போது நிறைய ரோஜாப்பூக்கள் கிடைக்கும். அதுமட்டுமின்றி, இந்த மாதத்தில் தான் காதலர் தினம் வருவதால், நிச்சயம் காதலர்கள் ரோஜாப்பூக்களை ஆசையாக வாங்கிக் கொடுப்பார்கள். மேலும் பெண்கள் ரோஜாப்பூக்களைப் பார்த்தாலே, மயங்கி விடுவர். அதனை தூக்கிப் போட மனம் வராது. எனவே இத்தகைய ரோஜாப்பூக்களை வீணடிக்காமல், அவற்றை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால், அதனை வைத்து முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம். இவ்வாறு ரோஜாப்பூக்களை வைத்து ஃபேஸ் பேக் போட்டால், முகம் நன்கு பொலிவோடு, அழகான ரோஜாப்பூ நிறத்தில் மின்னும்.
அதிலும் காதலர் தினத்தின் போது வெளியே காதலனுடன் செல்லும் போது, அழகாக காட்சியளிப்பதற்கு, இந்த ரோஜாப்பூ ஃபேஸ் பேக் சரியானதாக இருக்கும். எனவே இப்போது ரோஜாப்பூக்களை வைத்து எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்று பார்ப்போமா!!!

ரோஜாப்பூ இதழ்: ரோஜாப்பூக்களின் இதழ்களை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை அரைத்து பேஸ்ட் போல் செய்து, சிறிது தயிர், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் பசை மற்றும்ட வறட்சியான சருமத்திற்கு சிறந்தது.
ரோஜா மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்: ரோஜாவின் இதழ்களை நீரில் 30 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை எடுத்து, ஓரளவு அரைத்து, அத்துடன் ஓட்ஸை பொடி செய்து போட்டு, முகத்திற்கு தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். முக்கியம், இந்த ஃபேஸ் பேக் அல்லது ஸ்கரப் செய்யும் முன், முகத்தை நீரில் கழுவி, பின் பாலில் ஒருமுறை கழுவி, ரோஸ் வாட்டர் வைத்து துடைத்து, பின் முகத்திற்கு இந்த பேக் போட்டு, காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
ரோஸ், கடலை மாவு மற்றும் தயிர் பேக்: இது மற்றொரு சிறந்த ஃபேஸ் பேக். இதற்கு ரோஜா இதழ்களை அரைத்து, அதில் கடலை மாவு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, சிறிது ரோஸ் வாட்டர் ஊற்றி, கெட்டியான பேஸ்ட் போன்று செய்து, முகத்தில் தடவி, காய வைத்து, பின் பாலால் கழுவி, இறுதியில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் நன்கு மென்மையாகவும், அழகாகவும் காணப்படும்.
ரோஜா மற்றும் சந்தனப்பொடி: பருக்கள் மற்றும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு இந்த ஃபேஸ் பேக் சரியானதாக இருக்கும். இந்த ஃபேஸ் பேக்கிற்கு ரோஜாவின் இதழ்களை அரைத்து, சந்தனப் பொடி சேர்த்து கலந்து, ரோஸ் வாட்டர் மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் பருக்கள், கரும்புள்ளிகள், பிம்பின், அதிகப்படியான எண்ணெய் பசை போன்றவை நீங்கிவிடும்.
ரோஸ், சந்தனப்பொடி மற்றும் மஞ்சள் தூள்: இதுவும் ரோஜாப்பூ நிற கன்னங்களைப் பெறுவதற்கு ஏற்ற ஒரு ஃபேஸ் பேக். இந்த முறையில் ரோஜாவை அரைத்து, சந்தனப் பொடியுடன் சேர்த்து கலந்து, ரோஸ் வாட்டர் மற்றும் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பாலால் முகத்தில் கழுவி, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இவ்வாறெல்லாம் செய்து வந்தால், முகம் நன்கு பொலிவோடு, அழகாக மின்னும். இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்!!!



Click it and Unblock the Notifications