Just In
- 1 hr ago
ஓரின சேர்க்கையாளருக்கு ஏற்பட்டுள்ள புதிய ஆரோக்கிய பிரச்சனை என்னவென்று தெரியுமா?
- 5 hrs ago
கட்டுக்கடங்காமல் ஓடும் குதிரையை கட்டுப்படுத்த இந்த இளைஞர் செய்யும் வேலையை நீங்களே பாருங்களேன்…!
- 6 hrs ago
அகோரிகள் ஏன் மனித உடல்களை சாப்பிடுகிறார்கள் தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க...!
- 10 hrs ago
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
Don't Miss
- Automobiles
டிக் டாக் மோகத்தால் நடந்த விபரீதம்.. வேலையையிழந்து பரிதவிக்கும் ஓட்டுநர்...
- News
விஜய் திவஸ் டிசம்பர் 16: இந்திய ராணுவத்தின் வரலாற்று பெருமை வாய்ந்த வங்கதேச விடுதலை போர்!
- Sports
தம்பி.. உங்க வண்டவாளம் ஊருக்கே தெரிஞ்சுடுச்சு.. டகால்டி வேலை செய்து வசமாக சிக்கிய வெ.இண்டீஸ் வீரர்!
- Finance
தெனாவெட்டில் ஜியோ..! ஏர்டெல், வொடபோன் ஐடியாவை விட நாங்க தான் சீப்பு..!
- Movies
நினைவுகள் மறைவதில்லை... கல்யாண போட்டோவை வெளியிட்டு பிரியதர்ஷன் உருக்கம்
- Technology
சாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.!
- Education
UPSC NDA: யுபிஎஸ்சி என்டிஏ தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பீரை சருமத்திற்கு பயன்படுத்தி, சும்மா நச்சுன்னு ஆகுங்களேன்!!!
பீர் மிகவும் பிரபலமான ஒரு ஆல்கஹால். நிறைய ஆய்வுகளில் பீர் சாப்பிட்டால், உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றவும், சிறுநீரகக் கற்களை அகற்றவும் பீர் உதவியாக உள்ளது. இருப்பினும், அத்தகைய பீரில் உடல்நல நன்மைகள் மட்டுமின்றி, பல அழகு நன்மைகளும் நிறைந்துள்ளன. பீரை எப்படி பயன்படுத்தினாலும், சருமம் அழகாகும். அதாவது பீரை குடித்தாலும், சருமத்தில் பயன்படுத்தினாலும், சருமம் பொலிவோடு இருக்கும்.
மேலும் பீர் சருமத்திற்கு மட்டுமின்றி, முடிக்கும் நல்லது. பீர் ஒரு சிறந்த ஹேர் கண்டிஷனராகவும் திகழ்கிறது. அதிலும் பீரை சருமத்திற்கும், முடிக்கும் பலவாறு பயன்படுத்தலாம். குறிப்பாக அழகாக வேண்டும் என்று பீர் குடிப்பவர்கள், அதற்கு பதிலாக அதனை சருமத்திற்கு பயன்படுத்தி அழகாகலாம். ஏனெனில் அதிகமாக குடித்தால், தொப்பை வருவதோடு, கல்லீரலுக்கும் ஆபத்தானது. இப்போது பீரின் சில அழகு நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து, அதன் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

சரும வறட்சியை தடுக்கும்
பீர் சருமத்தில் ஏற்படும் வறட்சியை தடுப்பதில் சிறந்தது. அதிலும் குளிக்கும் போது, பீரைக் இறுதியில் ஒரு முறை உடலில் ஊற்றி குளித்தால், கடுமையான சூரிய வெப்பத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கலாம்.

ஹேர் கண்டிஷனர்
முடிக்கு ஒரு நல்ல இயற்கையான ஹேர் கண்டிஷனர் என்றால், அது பீர் தான். எனவே தலைக்கு குளிக்கும் போது, ஷாம்பு போட்டு முடியை அலசியதும், இறுதியில் பீரை முடியில் ஊற்றினால், முது பட்டுப் போன்று மென்மையாக இருக்கும்.

அழகான சருமம்
பீரை சருமத்தில் பயன்படுத்தும் போது, அது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கிவிடுவதால், சருமம் பொலிவோடு காணப்படும்.

மென்மையான சருமம்
சருமத்தை உடனே மென்மையாக்குவதில் பீர் உதவுகிறது. மேலும் சருமத்தை மென்மையாக்கும் வைட்டமின் பி-யும் அதிகம் அடங்கியுள்ளது.

அடர்த்தியான முடி
முடியை பீர் கொண்டு மசாஜ் செய்து அலசி வந்தால், முடியானது நன்கு அடர்த்தியாக வளரும்.

முகப்பரு
பீரில் உள்ள சில ஆன்டி-பாக்டீரியல் பொருள், முகப்பருக்களை போக்க உதவியாக உள்ளது. ஆகவே முகத்திற்கு போடும் ஃபேஸ் பேக்குகளில் சிறிது பீர் சேர்த்து வாருங்கள்.

சருமத்தின் pH தன்மை
பீருக்கு, சருமத்தில் உள்ள pH-இன் தன்மையை சீராக வைக்கும் சக்தி உள்ளது. சருமத்தில் உண்டாகும் பிரச்சனைகளான வறட்சி, அதிகப்படியான எண்ணெய் போன்றவை ஏற்படுவதற்கு காரணம், சருமத்தின் pH தன்மை சரியாக இல்லாததே ஆகும். எனவே இதனை சரும பராமரிப்பிற்கு பீர் பயன்படுத்துவது நல்லது.

முதுமையை தடுக்கும்
பீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், முதுமை தோற்றம் விரைவில் ஏற்படுவதை குறைக்கும்.

க்ளின்சிங் தன்மை
பீரை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத் துளைகளில் உள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்கும்.

பப்புள் குளியல் (Bubble Bath)
அழகைப் பராமரிப்பதற்கு நிறைய பணம் செலவழிக்க தயாராக இருப்பவர்கள், பப்புள் குளியல் என்னும் பீர் குளியலை மேற்கொள்ளலாம். இதனால் சருமமும், முடியும் நன்கு ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.