Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
சருமத்திற்கு ஏற்ற குளியல் சோப் எது?

பண்டைய காலங்களில் சோப் என்பது பயன்படுத்தப்படவில்லை. இயற்கையான பொருட்களை பயன்படுத்தியே தேய்த்து குளித்து வந்தனர். பின்னர் சிகைக்காய் அறிமுகமானது. மெல்ல சோப் என்ற பொருள் அழுக்கும் நீக்கும் சாதனமாக அறிமுகப்படுத்தப்பட்டது. சந்தையில் இன்றைக்கு எண்ணிலடங்காத பிராண்டு சோப்புகள் வந்து விட்டன. அவற்றில் வாசனையான சோப் என்று பார்த்து வாங்குவதை விட நமது சருமத்திற்கு ஏற்ற சோப் எது என்பதை பார்த்து வாங்கவேண்டும்.
சருமத்தின் தன்மை
பிறந்த குழந்தைகளுக்கு சருமத் துவாரங்கள் இருக்காது. அவர்களுக்கு பேபி சோப்தான் பெஸ்ட். வளர்ந்தவர்களுக்கு சருமத் துவாரங்கள் இருக்கும். அவர்கள் பேபி சோப் உபயோகிப்பது உகந்ததல்ல.
சருமம் ரொம்பவே வறண்டிருந்தால், மாயிச்சரைசர் உள்ள சோப் நல்லது. 40 வயதுக்கு மேலானவர்கள் மாயிச்சரைசர் உள்ள சோப் உபயோகிக்கலாம். குழந்தைகளுக்கு அதை உபயோகித்தால் சருமத்தில் வட்ட வட்டமாக மச்சம் மாதிரி வரும். சருமத்தின் தன்மை தெரியாமல் மூலிகை கலந்த சோப்புகளையும் உபயோகிக்க வேண்டாம். அத்தகைய சோப்புகள் ஆன்டிசெப்டிக்காக செயல்பட்டாலும், சருமத்தை கருப்பாக்கி விடலாம்.
ஃபேஸ் வாஷ்
சோப்புகளில் ஆரம்ப பி.ஹெச் பேலன்ஸ் அளவே 7.5 அல்லது 8 ஆக இருக்கிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் வாசனை அதிகமுள்ள சோப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டாம்.சோப்புக்கு பதில் ஃபேஸ் வாஷ் நல்லது. நமது முகத்தின் பி.ஹெச் பேலன்ஸ் 5.5. ஃபேஸ் வாஷின் பி.ஹெச் பேலன்ஸ் 6. இரண்டும் கிட்டத்தட்ட இணைந்து போவதால் சருமத்துக்கு நல்லது.



Click it and Unblock the Notifications