Latest Updates
-
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
சருமம் பளபளப்பாக பழம், காய்கறி சாப்பிடுங்க!: ஆய்வில் தகவல்

இங்கிலாந்தில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூ பல்கலைக்கழக பேராசிரியர் மேற்கொண்ட ஆய்வின் மூலம் பழங்கள், காய்கறிகளில் உள்ள கரோட்டினாய்டுகள், நிறமிகள் சருமத்தின் நிறத்தை பொலிவுறச்செய்கின்றன. அது மனிதர்களின் வாழ்நாளை அதிகரிக்கச்செய்கிறது என்று தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில் 35 மாணவர்கள் பங்கேற்றனர் அவர்களுக்கு உணவாக பழங்களும், காய்கறிகளும் வழங்கப்பட்டன. 6 வாரங்களில் அவர்களின் சருமத்தை பரிசோதனை செய்தபோது சருமத்தில் பளபளப்பு அதிகரித்து இருந்தது தெரியவந்தது.
இந்த ஆய்வு குறித்து கருத்து கூறியுள்ள ஆய்வாளர், பழங்கள், காய்கறிகளை உண்பவர்களுக்கு சருமம் பொன்நிறமாக மாறும் என்று கூறினார். அவர்கள் தங்களின் சருமத்தில் ஏற்படும் மாறுதலை கண்கூடாக காணலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த ஆய்வு முடிவு அமெரிக்காவின் மருத்துவஇதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
இதேபோல் ஸ்காட்லாந்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் நிறைய பழங்களும் காய்களும் சாப்பிடுங்கள். ஆறே வாரங்களில் உடலில் வனப்பும் மினுமினுப்பும் கூடும் என்று கண்டறிந்துள்ளனர். காய்கறிகள், பழங்களுக்கு வண்ணத்தை அளிக்கும் கரோட்டினாய்டுகளும் தாவர வேதிப் பொருட்களும் நம் உடலில் பொலிவும், கவர்ச்சியும் தரும் மாயாஜாலங்கள் செய்கின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.



Click it and Unblock the Notifications