Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
அழகின் ரகசியம் இயற்கையான உணவுதான்: ருக்மணி விஜயகுமார்

யோகா, மாடலிங், நடிப்பு, நடனம், நாட்டியம் என பன்முகத் திறமை கொண்ட ருக்மிணி விஜயகுமார்! ஒடிசலான தேகம், துறு துறு கண்கள், சுருள் முடி, வசீகரச் சிரிப்பு சர்வ லட்சணங்கள் பொருந்திய தேவதையாய் இருக்கிறார். அழகின் ரகசியம் கேட்டால் ஆர்வமாய் பேச ஆரம்பிக்கிறார் ருக்மணி. நல்ல பழக்கவழக்கங்களையும் கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையையும் உடல் ஆரோக்கியத்தையும் கத்துக்கொடுத்தவங்க என்னோட பெற்றோர்தான்.
அப்பாவுடன் தினமும் விடிகாலை 5.30 மணிக்கே பனிமூட்டமான பெங்களூர் சாலையில வாக்கிங், ரன்னிங் போவேன். ரெண்டு பேரும் டென்னிஸ், ஸ்குவாஷ் விளையாடுவோம். ஸ்கூலுக்குப் போய் வந்ததும், என் அண்ணா ஸ்ரீராம்கூட பேட்மின்டன் விளையாடுவேன் இதுவே என்னை பிட் ஆக வைத்திருக்கிறது.
கீரை, பச்சைக் காய்கறிகள், பழங்கள்னு இயற்கையான உணவை ஊட்டி ஊட்டி வளர்த்தவங்க என் அம்மாதான். இதுவே என் சருமத்தின் பளபளப்பிற்கு காரணமாக அமைந்து விட்டது என்று கூறி மலர்ச்சியோடு சிரித்தார் ருக்மணி.



Click it and Unblock the Notifications