Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
சும்மா அழகா மின்னனுமா? பாதாமை வெச்சு ஃபேஸ் பேக் போடுங்க...
சருமத்தை அழகாக வைப்பதற்கு நிறைய வழிகள் உள்ளன. அவற்றில் சில தான் சருமத்திற்கு ஃபேஸ் பேக் மற்றும் ஃபேஸ் மாஸ்க். அத்தகைய ஃபேஸ் மாஸ்க் மற்றும் பேக்கை அழகு நிலையங்களுக்குச் சென்று கெமிக்கல் கலந்த பொருட்களை போடுவதை விட, வீட்டில் இருக்கும் சில இயற்கையான பொருட்களை வைத்து போட்டால், சருமத்திற்கு எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல் இருக்கும். மேலும் ஃபேஸ் பேக்கில் நிறைய வகைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் பாதாம் ஃபேஸ் பேக்.

அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற பாதாம் ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
பாதாம்- 5
பால் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்
பாதாம் எண்ணெய் - 4 துளிகள்
பயன்படுத்தும் முறை:
பாதாம் இரவில் படுக்கும் முன் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் காலையில் எழுந்து, அதன் தோலை நீக்கி, பாலோடு சேர்த்து அரைத்து, மற்ற பொருட்களையும் அதனுடன் கலந்து, முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் மெதுவாக மசாஜ் போல் செய்து, பிறகு கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், சருமம் நன்கு மென்மையாக, சுத்தமாக, அழகோடு பளிச்சென்று மின்னும்.
வறண்ட சருமத்திற்கு...
இரவில் ஊற வைத்த பாதாமை காலையில் தோலை நீக்கி அரைத்து, ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் சேர்த்து பேஸ்ட் போல் செய்து, முகத்திற்கு தடவ வேண்டும். பின் காய்ந்ததும், வெதுவெதுப்பான நீரில் சுத்தமான துணி அல்லது காட்டனை வைத்து துடைக்க வேண்டும்.
சுருக்கமுள்ள சருமத்திற்கு...
பாதாமை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும். பின் அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். பேஸ்ட் செய்த பின், 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து கலந்து கொள்ளவும். பின் அந்த கலவையை முகத்திற்கு தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பிறகு ஈரமான துணியால் துடைத்து எடுக்கவும். இதனால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும்.
அதிலும் பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. இது உடலுக்கு, சருமத்திற்கு மட்டுமின்றி கூந்தலுக்கும் சிறந்தது. ஆகவே பாதாமை தினமும் சாப்பிடுவதோடு, அதன் எண்ணெயை கூந்தலுக்கு தடவி, சருமத்திற்கு அவ்வப்போது ஃபேஸ் மாஸ்க் போட்டு அழகாக ஜொலியுங்கள்...



Click it and Unblock the Notifications
