Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
ஆரோக்கிய சருமத்திற்கு ஏற்ற அழகான குறிப்புகள்!

நார்ச்சத்து உணவுகள்
நாம் உண்ணும் உணவானது நார்ச்சத்துள்ளதாக இருக்கவேண்டும். இதுவே உடலின் ஜீரணத்தன்மையை அதிகரிக்கும். சருமத்திற்கும் ஆரோக்கியத்தை தரும். ஆப்பிள், மாம்பழம், அன்னாச்சிப்பழம் போன்ற பழங்களில் உயர்தர நார்ச்சத்து உள்ளது. அதேபோல் புருக்கோலி, காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவற்றை உண்பதன் மூலம் உடலுக்கு தேவையான நார்ச்சத்து கிடைக்கும். உணவின் ஜீரணத்தன்மையும் அதிகரிக்கும்.
நல்ல கொழுப்புகள்
அதேபோல் மன அழுத்தமும், தூக்கம் குறைபாடும் சருமத்தை பாதிக்கும் அம்சங்களாம். எனவே தினசரி 8 மணிநேரம் நன்றாக உறங்குங்கள். மன அழுத்தம் இன்றி ரிலக்ஸ்சாக இருங்கள். நல்ல கொழுப்புகள் சருமத்தை பளபளப்பாக்குகிறது. இது இதயத்தையும் பாதுகாக்கிறது. எனவே கடல் உணவுகளை அதிகம் உட்கொள்ளலாம். பளபளப்பான ஆரோக்கியமான சருமம் கிடைக்கும்.
பராமரிப்பு குறிப்புகள்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான சருமம் உள்ளது. அதற்கேற்ப பராமரிக்க வேண்டும். கரடு முரடான திக்கான சருமம் கொண்டவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை அரை டீ ஸ்பூன் எடுத்து தேனுடன் ஒரு டீஸ்பூன் பால் பவுடர் போட்டு கலந்து பேஸ்ட் போல செய்யவும். இதனை முகத்தில் சீராகத் தேய்த்து 20 நிமிடத்திற்கு ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்து வர சருமம் மென்மையாகும்.
ஒரு சிலருக்கு முகத்தில் ஆழமான துளைகள் காணப்படும். இவர்கள் சோள மாவுடன் பால் கலந்து அடித்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து “பேஸ்ட்” செய்து அதை முகத்தில் உடனே தடவிக் கொள்ளவும் சருமம் சீராகும்.
வெள்ளரி பேஸ்ட்
கருப்பு மருக்களைக் கொண்ட சருமத்திற்கு, முட்டையின் வெள்ளைக் கருவை சோள மாவுடன் கலந்து பேஸ்ட் ஆக்கி இதைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது அரை மணி நேரம் வரை தடவவும். பிறகு தூய்மையான நீரில் தேய்த்துத் தேய்த்துக் கழுவவும்.
அனைத்து சருமத்திற்கும், வெள்ளரி பேஸ்ட் ஏற்றது. வெள்ளரி சாறு கண்களின் ஓரங்களில் உள்ள கரு வளையங்களை நீக்க உதவும். எனவே வெள்ளரிக்காயை பேஸ்ட் செய்து முகத்தில் தடவவும். இது சருமத்திற்கு பொலிவை ஊட்டுவதோடு குளிர்ச்சியையும் தருகிறது.



Click it and Unblock the Notifications
