Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
சருமத்தை பொலிவாக்கும் உடல் பாலீஸ்!

உடலை பாலீஸ் செய்வதற்கென சில அழகு நிலையங்கள் உள்ளன. அங்கு வழங்கப்படும் ஆடைகளை உடுத்திக்கொண்டு முதலில் பாலீஸ் செய்ய தயாராகவேண்டும். அதற்கென உள்ள பிரத்யேக குளியல் அறையில் இந்த பாலீஸ் செய்யப்படுகிறது.
சானா பாத்
உடல் பாலீஸ் செய்வதற்கு முன்னதாக நீராவி குளியல் எடுக்கச்செய்கின்றனர். இதனால் சருமம் ரிலாக்ஸ் ஆகிறது.
உப்பு பாலீஸ்
சருமத்தை பாலீஸ் செய்ய பல வித பொருட்கள் உபயோகப்படுத்தப்பட்டாலும் அதில் உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. உப்பு கொண்டு உடலில் தேய்ப்பதன் மூலம் இறந்த செல்கள் நீக்கப்படுகின்றன. இதனால் சருமம் இளமையோடு பொலிவடைகிறது.
சாக்லேட், காஃபி, பழங்கள்
நாம் அன்றாடம் சாப்பிடும் டாக் சாக்லேட், காஃபி, பழங்களும் கூட உடலை பாலீஸ் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. நாம் எதைத் தேர்ந்தெடுக்கிறோமோ அதை உபயோகித்து பாலீஸ் செய்கின்றனர். இதனால் சருமம் மென்மையும், பொலிவும் அடைகிறது.
வறண்ட சருமத்தினருக்கு அரோமேட்டிக் ஆயில், கிரீம் உபயோகித்து பாலீஸ் செய்யப்படுகிறது. இதனால் சருமத்திற்கு வழு வழு தன்மை கிடைக்கிறது. இந்த கிரீமை பத்து நிமிடம் ஊறவைத்து பின்னர் கழுவி விடலாம்.
சருமம் பொலிவாகும்
பாடி பாலீஸ் செய்த உடன் சோப், ஜெல் எதுவும் உபயோகிக்காமல் குளிப்பது ஆரோக்கியமானது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். குளித்து முடித்த உடன் மென்மையான டவல் கொண்டு உடலை ஒற்றி எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
உடல் பாலீஸ் செய்வதற்கு கொடுக்கப்படும் விலை அதிகமானதுதான் இதனை அடிக்கடி செய்ய முடியாது. ஆண்டிற்கு ஒருமுறையாவது செய்து கொள்வதன் மூலம் மன இறுக்கம், உளைச்சல் நீங்கும் என்றும் அழகியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். மணப்பெண்கள் திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு செய்து கொள்வது சருமத்தை பொலிவடையச் செய்யும் என்றும் அழகியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.



Click it and Unblock the Notifications