Latest Updates
-
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: மே மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் அபார வளர்ச்சியை காண்பாங்க.. -
அவரைக்காய் வாங்குனா சாம்பார் வைக்காம இந்த மாதிரி கூட்டு செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
வெயிலுக்கு வாழைத்தண்டை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், உடல் சூடும் குறையும்.. -
அரசியலில் பெரிய தலைவராக வரும் அதிர்ஷ்டமும், தகுதியும் உள்ள 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு வரக்கூடாதா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 3 விதைகளை நீரில் ஊற வெச்சு சாப்பிடுங்க.. -
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது -
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..
2 வாரத்தில் குதிகால் வெடிப்பை போக்கணுமா? அப்ப கிச்சன்-ல இருக்குற பொருளை தினமும் நைட் இப்படி யூஸ் பண்ணுங்க...
Skin Care Tips In Tamil: நாம் ஒவ்வொருவருமே ஒவ்வொருவிதமான சரும பிரச்சனைகளை சந்திப்போம். அதில் நிறைய பேர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் குதிகால் வெடிப்பு. இந்த குதிகால் வெடிப்பு கால்களை அசிங்கமாக வெளிக்காட்டுவதோடு, சில சமயங்களில் கடுமையான வலியை ஏற்படுத்தும்.
ஒருவருக்கு குதிகால் வெடிப்பு எதனால் வருகிறது என்பது தெரியுமா? நமது உடலில் குதிகாலில் எண்ணெய் சுரப்பிகள் எதுவும் இல்லை. இதனால் குதிகாலில் வறட்சி அதிகம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இந்த வறட்சியை ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், பின் அது குதிகாலில் வெடிப்புகளை ஏற்படுத்திவிடும்.

இதை தவிர்க்க சிறந்த வழி, எப்படி முகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதேப் போல் குதிகால்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, பராமரிப்புக்களை தவறாமல் கொடுக்க வேண்டும்.
குதிகால் வெடிப்பு வெறும் வறட்சியால் மட்டும் ஏற்படுவதில்லை. உடல் பருமன், பொருத்தமான காலணியை அணியாமல் இருப்பது, நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பது, போதுமான பராமரிப்புக்களை பாதங்களுக்கு கொடுக்காமல் இருப்பது போன்றவற்றாலும் ஏற்படுகிறது.
ஆனால் அழகை கெடுக்கும் குதிகால் வெடிப்பை சரிசெய்ய நமது சமையலறையில் உள்ள சில பொருட்களே பெரிதும் உதவி புரியும். கீழே குதிகால் வெடிப்பைப் போக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. வாழைப்பழம்
வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளன. இவை அனைத்தும் சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துவதோடு, சருமத்தை நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்கிறது. இயற்கையாகவே வாழைப்பழம் ஒரு மாய்ஸ்சுரைசர் போன்று செயல்படும். எனவே வறட்சியால் ஏற்படும் குதிகால் வெடிப்பைப் போக்க வாழைப்பழம் பெரிதும் உதவி புரியும்.
அதற்கு நன்கு கனிந்த 2 வாழைப்பழத்தை எடுத்து மசித்து, அதை குதிகாலில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி 2 வாரத்திற்கு தொடர்ந்து தினமும் இரவு தூங்கும் முன் செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
2. சமையல் எண்ணெய்
சமையலில் பயன்படுத்தப்படும் எண்ணெய் சருமத்தால் எளிதில் உறிஞ்சப்படும். சமையல் எண்ணெயில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி மற்றும் வைட்டமின் ஈ போன்ற சருமத்தின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த எண்ணெயை குதிகால் வெடிப்பிற்கு பயன்படுத்தினால், குதிகாலில் புதிய செல்களை உருவாக்கி, குதிகால் வெடிப்பை போக்கும்.
அதற்கு கால்களை நீரில் கழுவி, துடைத்துவிட்டு, சமையல் எண்ணெயை பாதங்களில் தடவி, கால்களில் சாக்ஸை அணிந்து கொள்ள வேண்டும். இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்து வந்தால், குதிகாலில் உள்ள வெடிப்புக்கள் விரைவில் மறைந்துவிடும்.
3. தேன்
தேனில் உள்ள மருத்துவ குணங்கள், குதிகால் வெடிப்பை சரிசெய்யும். மேலும் தேன் சருமம் வறட்சியடைவதைத் தடுக்கும் மற்றும் சருமத்திற்கு ஒரு புத்துயிர் அளிக்கும். அப்படிப்பட்ட தேனை ஒரு கப் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் தேனை சேர்த்து கலந்து, அந்நீரில் பாதங்களை 20 நிமிடம் ஊற வைத்து எடுக்க வேண்டும். பின் பாதங்களை உலர வைத்து, மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும். இப்படி தினமும் இரவு தூங்கும் முன் சில வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால், குதிகால் வெடிப்பு சீக்கிரம் மறையும்.
4. எலுமிச்சை சாறு மற்றும் வேஸ்லின்
அசிட்டிக் பண்புகள் நிறைந்த எலுமிச்சையை, ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்ட வேஸ்லின் உடன் சேர்த்து பயன்படுத்தும் போது, வறட்சியால் ஏற்பட்ட பிளவுகள் விரைவில் மறையும். அதுவும் குதிகால் வெடிப்பு கடுமையாக இருந்தால், முதலில் கால்களை வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, எடுத்துக் கொள்ள வேண்டும். பின் கால்களை உலர்த்திக் கொள்ள வேண்டும்.
அதன் பின் ஒரு பௌல்ல 1 டீஸ்பூன் வேஸ்லின் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, குதிகால் வெடிப்பின் மீது தடவி, சாக்ஸை அணிந்து கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு வாரங்கள் தினமும் இரவு தூங்கும் முன் செய்தால், குதிகால் வெடிப்பு மறைவதைக் காணலாம்.
5. அரிசி மாவு, தேன் மற்றும் வினிகர்
குதிகால்களில் உள்ள வெடிப்பு வலியை ஏற்படுத்துகிறதா? அப்படியானால் இந்த ஸ்க்ரப்பை பயன்படுத்துங்கள். அதற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 5-6 துளிகள் வினிகரை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் கால்களை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து எடுத்து, பின் பாதங்களை உலர்த்திக் கொள்ள வேண்டும்.
அதன் பின் தயாரித்து வைத்துள்ள ஸ்கரப்பை பாதங்களில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஸ்க்ரப்பை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்த வேண்டும். இப்படி தவறாமல் செய்து வந்தால், பாதங்களில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, வெடிப்புக்கள் மாயமாய் மறையும்.



Click it and Unblock the Notifications











