Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
உங்க முழங்கால் கருப்பா இருக்குதா? அப்ப இந்த வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க..
Skin Care Tips In Tamil: உங்கள் உடலில் முழங்கால்கள் மிகவும் கருமையாக உள்ளதா? இது உங்களுக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்துகிறதா? முழங்கால்கள் கருமையாக இருக்க அப்பகுதியில் இறந்த செல்கள் அதிகமாக தேங்கியிருப்பதும், தரைகளில் அதிகமாக முழங்கால்களை மண்டியிட்டு அமர்வதும், போதுமான பராமரிப்புக்களை கொடுக்காமல் இருப்பது போன்றவைகளும் தான் காரணம்.
மேலும் உடலின் பிற பகுதிகளை விட, முழங்கால் சருமம் சற்று தடிமனாக இருப்பதோடு, குறைவான எண்ணெய் சுரப்பிகளையும் கொண்டிருப்பதால், இப்பகுதியில் அதிக வறட்சியை சந்திக்க நேரிடுவதோடு, கருமையாகவும் இருக்கிறது. இப்படி கருப்பான முழங்கால்களைக் கொண்டிருந்தால், குட்டையான ஆடைகளை அணியும் போது ஒருவித சங்கடத்தை உண்டாக்கும்.

ஆனால் இப்படி கருப்பாக இருக்கும் முழங்கால்களை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் வெள்ளையாக்கலாம். அதுவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை ஒருவர் தொடர்ந்து பின்பற்றி வந்தால், விரைவில் முழங்கால் கருமையை போக்கலாம். இப்போது முழங்கால் கருமையைப் போக்க உதவும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.
1. எலுமிச்சை மற்றும் தேன் ஸ்க்ரப்
* இந்த ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முழங்கால்களில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரம் 2-3 முறை பயன்படுத்தி வர, முழங்கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, கருமை மங்கத் தொடங்கும்.
2. தேங்காய் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்
* இந்த ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முழங்கால்களில் தடவி, மென்மையாக 5-10 நிமிடம் சுழற்சி முறையில் தேய்க்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரில் நனைத்த துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.
* இப்படி அடிக்கடி செய்யும் போது முழங்கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, வறட்சி தடுக்கப்பட்டு, கருமை நீங்கத் தொடங்கும்.
3. பேக்கிங் சோடா மற்றும் பால்
* இதற்கு ஒரு பௌலில் பேக்கிங் சோடா மற்றும் பாலை சமஅளவில் எடுத்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முழங்கால்களில் தடவி 2-3 நிமிடம் மென்மையாக தேய்க்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* முக்கியமாக இதை பயன்படுத்தி உலர்த்திய பின், மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.
4. கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சை சாறு
* இதற்கு ஒரு பௌலில் கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சை சாற்றினை சம அளவில் எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முழங்கால்களில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி ஒருநாள்விட்டு ஒருநாள் செய்து வர, முழங்கால் கருமை மறையத் தொடங்கும்.
5. வெள்ளரிக்காய்
* இதற்கு வெள்ளரிக்காய் துண்டை எடுத்து, அதை நேரடியாக முழங்காலில் 5-10 நிமிடம் தேய்க்க வேண்டும்.
* இப்படி தினமும் செய்து வந்தால் மாற்றத்தைக் காணலாம்.
* இன்னும் சிறப்பான பலனைப் பெற, வெள்ளரிக்காய் சாற்றுடன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முழங்காலில் தடவி காய வைத்து, பின் கழுவுங்கள்.
* இப்படி தினமும் பயன்படுத்தி வந்தால், முழங்கால் கருமை மங்குவதைக் காணலாம்.
6. கடலை மாவு மற்றும் தயிர்
* இந்த பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முழங்காலில் தடவி, நன்கு காய வைக்க வேண்டும்.
* அதன் பின் நீரைப் பயன்படுத்தி மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
* இந்த பேக்கை பயன்படுத்துவதால், முழங்காலில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, கருமையும் மறையத் தொடங்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications