Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம்
கருப்பான உங்க அக்குளை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...
Skin Care Tips In Tamil: உங்க அக்குள் கருப்பா இருக்கா? இதனால் உங்களால் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணிய முடியவில்லையா? உங்களின் கருமையான அக்குளை வெள்ளையாக்க வேண்டுமா? அதற்காக கடைகளில் விற்கப்படும் அக்குளை வெள்ளையாக்கும் பல்வேறு அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறீர்களா? இருப்பினும் உங்கள் அக்குளில் உள்ள கருமை நீங்கவில்லையா? அப்படியானால் இயற்கை வழிகளை முயற்சித்துப் பாருங்கள்.
நம் வீட்டு சமையலறையில் அக்குளில் உள்ள கருமையைப் போக்கும் பல பொருட்கள் உள்ளன. அந்த பொருட்களை அக்குளில் பயன்படுத்தும் போது, விடாப்பிடியான அக்குள் கருமை நீங்கி, அக்குள் பட்டுப்போன்று மென்மையாகவும், வெள்ளையாகவும் மாறும். கீழே அக்குளில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை ட்ரை செய்து பாருங்கள்.

1. வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை
* சிறிது வெள்ளரிக்காயை எடுத்து அரைத்து, அத்துடன் பாதி எலுமிச்சையின் சாற்றினை பிழிந்து சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை அக்குளில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் அக்குளை கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தும் போது, அக்குளில் உள்ள கருமை மறைவதைக் காணலாம்.
2. தயிர் மற்றும் கடலை மாவு
* இதற்கு ஒரு பௌலில் 2 ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 1 ஸ்பூன் கடலை மாவை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை அக்குளில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் தேய்த்து கழுவ வேண்டும்.
* இந்த பேக் அக்குளில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை வெளியேற்றுவதோடு, கருமையையும் நீக்க உதவும்.
3. உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை
* இதற்கு ஒரு பௌலில் உருளைக்கிழங்கை துருவி 2 டீஸ்பூன் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை அக்குளில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு பஞ்சுருண்டையை நீரில் நனைத்து துடைத்து எடுக்க வேண்டும்.
* இப்படி ஒருநாள் விட்டு ஒருநாள் பயன்படுத்தி வர, அக்குள் கருமை நீங்குவதைக் காணலாம்.
4. பேக்கிங் சோடா மற்றும் தேங்காய் எண்ணெய்
* இதற்கு ஒரு பௌலில் பேக்கிங் சோடாவை எடுத்து, அத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து வெதுவெதுப்பான நீரால் அக்குளை கழுவ வேண்டும்.
* இந்த பேக் அக்குளில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, ஈரப்பதத்துடனும் வைத்துக் கொள்ளும்.
5. மஞ்சள், தயிர் மற்றும் தேன் மாஸ்க்
* இதற்கு ஒரு பௌலில் 1 ஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து, அத்துடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் 2 ஸ்பூன் தயிரை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை அக்குளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் அக்குளை கழுவ வேண்டும்.
* இந்த அக்குள் பேக் அக்குளில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி, அக்குளை வெள்ளையாக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications