Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
முகத்தில் சுருக்கம் அதிகமா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க..
Skin Care Tips In Tamil: உங்கள் முகத்தில் சுருக்கங்கள் அதிகமாக உள்ளதா? இந்த முகச்சுருக்கங்களால் உங்கள் முகம் பார்ப்பதற்கே வயதானவர் போன்று காட்சியளிக்கிறதா? ஒருவரது முகத்தில் சுருக்கங்கள் விழ வயது அதிகமாவது ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும், இளமைக்காலத்தில் முகத்தில் சுருக்கங்கள் விழ மாசடைந்த சுற்றுச்சூழல், அதிகப்படியான மேக்கப், அதிகப்படியான சரும வறட்சி, சருமத்திற்கு போதுமான பராமரிப்புக்களைக் கொடுக்காமை, ஆரோக்கியமற்ற உணவுகள் போன்ற பல விஷயங்கள் காரணமாக உள்ளன.
எனவே சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்க ஒருவர் சருமத்திற்கு போதுமான பராமரிப்புக்களை அவ்வப்போது கொடுக்க வேண்டும். தளர்வடைந்து இருக்கும் சருமத்தை இறுக்கமடையச் செய்ய ஒருசில ஃபேஸ் பேக்குகள் உதவி புரியும். அந்த ஃபேஸ் பேக்குகளை ஒருவர் அடிக்கடி போட்டு வந்தால், முதுமைத் தோற்றத்தைத் தவிர்த்து, நீண்ட காலம் இளமையாக காட்சியளிக்கலாம். இப்போது சருமத்தை இறுக்கமடையச் செய்யும் சில ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.

1. கற்றாழை ஃபேஸ் பேக்
* கற்றாழையில் நீர்ச்சத்து மற்றும் சருமத்தை இறுக்கமடையச் செய்யும் பண்புகள் இருப்பதால், இந்த கற்றாழையின் ஜெல்லை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த ஜெல்லை முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குறிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்து வந்தால், சருமத்தின் நெகிழ்வுத்தன்மை மேம்படுவதோடு, சருமமும் அழகாக இருக்கும்.
2. பப்பாளி ஃபேஸ் பேக்
* பப்பாளியில் உள்ள வலிமையான நொதிகள் சருமத்தை இறுக்கமடையச் செய்து, சருமத்திற்கு இளமைத் தோற்றத்தை தருகின்றன.
* அதற்கு நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர, நல்ல பலனை விரைவில் காணலாம்.
3. வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
* வெள்ளரிக்காய் நீர்ச்சத்து நிறைந்தது மற்றும் குளிர்ச்சியானது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் இது சருமத் துளைகளை இறுக்கமடையச் செய்து, இளமைத் தோற்றத்தைத் தர பெரிதும் உதவி புரியும்.
* அதற்கு சிறிது வெள்ளரிக்காயை எடுத்து அரைத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
4. கடலை மாவு ஃபேஸ் பேக்
* கடலை மாவு சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளைப் போக்கி, சருமத்தை இறுக்கமடையச் செய்ய உதவிபுரியும்.
* அதற்கு ஒரு பௌலில் 2 டீஸ்பூன் கடலை மாவை எடுத்து, ரோஸ் வாட்டர் மற்றும் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் மென்மையாக ஸ்க்ரப் செய்து கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த நல்ல பலனைப் பெறலாம்.
5. வாழைப்பழ ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு நன்கு கனிந்த ஒரு வாழைப்பழத்தை எடுத்து மசித்து, தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒருமுறை பயன்படுத்த முகத்தில் உள்ள சுருக்கம் மாயமாய் மறையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications