Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
பண்டிகை நாளில் பளிச்சுன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை நைட் டைம்-ல போடுங்க..
Skin Care Tips In Tamil: பண்டிகைகள் வரிசையாக வரத் தொடங்கிவிட்டது. அனைவரும் பண்டிகை காலத்தில் அழகான ஆடைகளை உடுத்து, பளிச்சென்று ஜொலிக்க விரும்புவார்கள். அதுவும் பெண்கள் பலர் தங்கள் அழகை அதிகரித்து காட்ட அழகு நிலையங்களுக்கு சென்று சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுப்பார்கள்.
ஆனால் தற்போது அதிகப்படியான வேலைப்பளுவால் நிறைய பேருக்கு அழகு நிலையங்களுக்கு கூட செல்ல நேரம் கிடைப்பதில்லை. வீட்டிற்கு வரவே தாமதமாகிறது. இந்நிலையில் பண்டிகை காலத்தில் சருமத்தின் அழகை மேம்படுத்த வீட்டில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டே ஃபேஸ் பேக்குகளை போட பலரும் நினைப்பார்கள்.

ஆனால் சருமத்திற்கு உடனடி பொலிவைத் தரும் ஃபேஸ் பேக்குகள் எவையென்று தெரியவில்லையா? கீழே சருமத்தில் உள்ள அழுக்குகளை போக்கி சருமத்திற்கு உடனடி பொலிவைத் தரும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் உங்களுக்கு ஏற்றதை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
1. தயிர் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தி வருவதன் மூலம், சரும பொலிவு அதிகரிப்பதோடு, சருமமும் ஈரப்பதத்துடன் இருக்கும்.
2. எலுமிச்சை மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவற்றை நீக்குவதோடு, சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கி, பொலிவைத் தரும்.
3. பால் மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடரை எடுத்து, அத்துடன் பேஸ்ட் செய்ய தேவையான அளவு பாலை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* அதன் பின் 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4. பப்பாளி மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த பப்பாளி துண்டை எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
5. கற்றாழை மற்றும் வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் சிறிது வெள்ளரிக்காய் சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications