Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
உங்க முகம் பளீச்ன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த கொரியன் ஃபேஸ் பேக்குகளை போடுங்க...
Skin Care Tips In Tamil: உங்கள் முகம் எப்போதும் டல்லாக உள்ளதா? எத்தனை முறை முகத்தை கழுவினாலும், முகம் பொலிவடையமாட்டீங்குதா? அப்படியானால் உங்கள் முகத்தில் இறந்த செல்கள் அதிகம் தேங்கியுள்ளது என்று அர்த்தம். இந்த இறந்த செல்களை நீக்க வேண்டுமானால், அதற்கு சரியான சரும பராமரிப்புக்களை தினமும் கொடுக்க வேண்டும்.
சிலர் சரும அழகை பராமரிக்க அழகு நிலையங்களுக்கு செல்வார்கள். ஆனால் சமீப காலமாக அதிகப்படியான வேலைப்பளு காரணமாக அழகு நிலையங்களுக்கு செல்ல கூட நிறைய பேருக்கு நேரமில்லை? இந்நிலையில் இத்தகையவர்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை தான் பயன்படுத்த வேண்டும். அதுவும் கொரியன் ஃபேஸ் பேக்குகளை போடுவதன் மூலம் உடனடி பலனை பெறலாம்.

தற்போது கொரியன் ஃபேஸ் பேக்குகள் பெண்களிடையே பிரபலமாக உள்ளது. நிறைய பெண்கள் கொரியன் ஃபேஸ் பேக்குகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். உங்களுக்கு கொரியன் ஃபேஸ் பேக்குகள் தெரியாதெனில், கீழே சில நேச்சுரல் கொரியன் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. அரிசி நீர் மற்றும் க்ரீன் டீ மாஸ்க்
* ஒரு பௌலில் சிறிது அரிசி கழுவிய நீரை எடுத்து, அத்துடன் சிறிது க்ரீன் டீயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு பஞ்சுருண்டையை பயன்படுத்தி, இதை முகத்தில் தடவ வேண்டும்.
* 10-15 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்து வந்தால், முகம் பளிச்சென்று பிரகாசிக்கும்.
2. தேன் மற்றும் தயிர் மாஸ்க்
* இந்த மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் தயிர் மற்றும் தேனை சம அளவில் எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்த, முகம் பொலிவாக இருக்கும்.
3. கற்றாழை மற்றும் வெள்ளரிக்காய் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு மிக்சர் ஜாரில் கற்றாழை ஜெல் மற்றும் சிறிது வெள்ளரிக்காய் துண்டுகளை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
4. மஞ்சள் தூள் மற்றும் பால் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் மஞ்சள் தூளை எடுத்து, அத்துடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர, முகம் பொலிவுடன் இருக்கும்.
5. ஓட்ஸ் மற்றும் வாழைப்பழ மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் ஓட்ஸ் பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications