Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்க முகம் எப்பவும் எண்ணெய் வழிந்து டல்லா இருக்கா? இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க...
Skin Care Tips In Tamil: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சருமம் இருக்கும். ஒவ்வொரு வகை சருமத்தினரும், ஒவ்வொரு விதமான சரும பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். அதில் எண்ணெய் பசை சருமத்தினர் சந்திக்கும் பிரச்சனைகள் என்றால், முகப்பரு, முகத்தில் எண்ணெய் அதிகம் வழிந்து, முகம் பொலிவிழந்து டல்லாக காணப்படுவது போன்றவை தான்.
இப்பிரச்சனைகளைத் தவிர்க்க சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தினாலே போதும். இந்த எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த சிறந்த வழி ஃபேஸ் பேக்குகளைப் போடுவது.

அதுவும் கெமிக்கல் கலந்த ஃபேஸ் பேக்குகளுக்கு பதிலாக, நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடும் போது, சருமத்தில் உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான எண்ணெய் சுரப்பு கட்டுப்படுவதோடு, முகமும் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும். கீழே முகத்தில் வழியும் எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்தி, முகத்திற்கு பொலிவைத் தரும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை எடுத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை போடுவதால், சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் கட்டுப்படுவதோடு, முகப்பருக்கள் வருவதும் குறையும்.
2. ஓட்ஸ், தேன், எலுமிச்சை சாறு ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 5-6 துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
3. கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, காய வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் 2 முறை பயன்படுத்தலாம்.
4. முல்தானி மெட்டி, க்ரீன் டீ மற்றும் டீ-ட்ரீ ஆயில் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி, 2 டேபிள் ஸ்பூன் க்ரீன் டீ மற்றும் 1-2 துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்துவதன் மூலம், முகம் பளிச்சென்று, பிரகாசமாக இருக்கும்.
5. சந்தன பவுடர், தேன் மற்றும் தேங்காய் பால் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடர், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த பேஸ் பேக் முகத்திற்கு பொலிவைத் தருவதோடு, சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ளவும் உதவும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications