Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
உங்க முகம் எப்பவும் எண்ணெய் வழிந்து அசிங்கமா காணப்படுதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க..
Skin Care Tips In Tamil: உங்கள் முகம் எண்ணெய் வழிந்து அசிங்கமாக காணப்படுகிறதா? முக்கியமாக முகம் பொலிவிழந்து கருப்பாகவும், முகப்பருக்கள் அதிகமாக வந்தவாறும் உள்ளதா? அப்படியானால் முதலில் உங்கள் முகத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்த வேண்டும். அதோடு முகப்பருக்கள் வராமல் இருக்க சருமத் துளைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதற்கு சருமத்திற்கு போதுமான பராமரிப்பை கொடுக்க வேண்டும். அதுவும் அழகு நிலையங்களுக்கு சென்று நிறைய பணத்தை செலவழிக்க வேண்டும் என்பதில்லை. நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தாலே போதுமானது. கீழே முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையை போக்கும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. கற்றாழை மஞ்சள் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை தினமும் பயன்படுத்தி வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.
2. முட்டை வெள்ளைக்கரு மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வர, சருமத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
3. கடலை மாவு மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் கடலை மாவை எடுத்து, அத்துடன் சிறிது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
4. முல்தானி மெட்டி மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் முல்தானி மெட்டி பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒருமுறை பயன்படுத்தலாம்.
5. சந்தனப்பவுடர் மற்றும் ரோஸ்வாட்டர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் சந்தன பவுடரை எடுத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கையும் வாரம் 1 முறை பயன்படுத்தினால், முகம் பளிச்சென்று பிரகாசமாக ஜொலிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications