Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உங்க முகத்தில் குழிகள் அதிகமாக உள்ளதா? அதை போக்க இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க..
Skin Care Tips In Tamil: உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்தால், மேடு பள்ளங்கள் நிறைந்து அசிங்கமாக காணப்படுகிறதா? இப்படியான சரும பிரச்சனையால் நிறைய பேர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதுவும் இது பெரும்பாலும் கன்னங்கள், நெற்றி, மூக்குப் பகுதியைச் சுற்றி காணப்படும். இது ஒருவரது அழகையே கெடுக்கும் வகையில் இருக்கும். மேலும் இப்பிரச்சனையைக் கொண்டவர்களின் முகத்தில் எப்போதும் எண்ணெய் வழிந்தவாறு இருக்கும்.
இந்த பிரச்சனையைக் கொண்டவர்கள் அதை சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், பின் வேறு பல சரும பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதிர்ஷ்டவசமாக, இந்த சரும பிரச்சனையைப் போக்க நமது வீடு சமையலறையில் உள்ள சில பொருட்கள் பெரிதும் உதவி புரியும். இப்போது திறந்துள்ள சருமத்துளைகளை சுருக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.

1. முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டியுடன் ரோஸ்வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த தக்காளியின் கூழை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10-12 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
3. கடலை மாவு, மஞ்சள் தூள் மற்றும் தயிர் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 2 டேப்ள் ஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4. க்ரீன் டீ ஐஸ் கட்டிகள்
* இந்த க்ரீன் டீ ஐஸ் கட்டிகள் சருமத்தில் திறந்திருக்கும் சருமத்துளைகளை சுருங்க உதவும் ஒரு சூப்பரான ட்ரிக்ஸ்.
* இதற்கு க்ரீன் டீயை தயாரித்த பின், அதை ஐஸ் ட்ரேயில் ஊற்றி, உறைய வைக்க வேண்டும்.
* பின்பு அந்த ஐஸ் கட்டிகளை எடுத்து, முகத்தில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
* இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால், முகத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். மேலும் முகமும் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
5. கற்றாழை மற்றும் வெள்ளரிக்காய் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications