Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
உங்க முகத்தில் அசிங்கமான கருமை திட்டுகள் இருக்கா? அப்ப இத தினமும் யூஸ் பண்ணுங்க.. போயிடும்..
Skin Care Tips In Tamil: ஒருவரது முக அழகைக் கெடுக்கும் ஏராளமான சரும பிரச்சனைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஹைப்பர்பிக்மென்டேஷன். இந்த ஹைப்பர்பிக்மென்டேஷன் சூரிய கதிர்கள், ஹார்மோன் மாற்றங்கள், முகப்பரு தழும்புகள் போன்றவற்றால் சருமத்தில் ஏற்படும் கருமையான திட்டுக்கள் ஆகும். இந்த கருமையான திட்டுக்கள் ஒருவரது முக அழகை கெடுப்பது மட்டுமின்றி, தன்னம்பிக்கையையும் பாதிக்கும்.
நிறைய பேர் இப்படியான கருமையான திட்டுக்களைப் போக்க அல்லது மறைக்க கடைகளில் விற்கப்படும் ஏராளமான பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இன்னும் சிலர் முகத்தில் உள்ள ஹைப்பர்பிக்மென்டேஷனுக்கு சிகிச்சையை மேற்கொள்கின்றனர். ஆனால் இப்படி கெமிக்கல் கலந்த பொருட்கள் அனைவருக்குமே நல்ல பலனைத் தந்துவிடாது.

சிலருக்கு நற்பலனைத் தந்தாலும், சிலருக்கு எந்த ஒருமாற்றத்தையும் ஏற்படுத்தாமல், மாறாக பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால் இந்த கருமையான திட்டுக்களைப் போக்க உதவும் ஏராளமான இயற்கை பொருட்கள் நம் வீட்டு சமையலறையிலேயே உள்ளன. கீழே ஹைப்பர்பிக்மென்டேஷனைப் போக்க உதவும் சில இயற்கை பொருட்களும், அவற்றை பயன்படுத்தும் வழிகள் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. ஆப்பிள் சீடர் வினிகர்
* ஆப்பிள் சீடர் வினிகரில் அசிட்டிக் அமிலம் உள்ளது. இது சருமத்தில் உள்ள அதிகப்படியான நிறமியைக் குறைக்க உதவுகிறது.
* இந்த ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு பங்கு எடுத்து, அத்துடன் 2 பங்கு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை கருமையான திட்டுக்கள் உள்ள இடத்தில் தடவி 1-2 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் ஒருமுறை செய்தால் நல்ல பலனைப் பெறலாம்.
2. கற்றாழை
* கற்றாழை ஜெல்லில் அலோயின் என்னும் சரும நிறமியைக் குறைக்கும் பொருள் உள்ளது.
* இந்த கற்றாழை ஜெல்லை கருமையான திட்டுக்கள் உள்ள பகுதியில் இரவு தூங்கும் முன் தடவி, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் பயன்படுத்தி வந்தால், ஒரு நல்ல மாற்றத்தை முகத்தில் காணலாம்.
3. எலுமிச்சை சாறு மற்றும் தேன்
* எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது கருமையான திட்டுக்களைக் குறைக்க உதவியாக இருக்கும்.
* இந்த எலுமிச்சை சாற்றினை ஒரு டீஸ்பூன் எடுத்து, அத்துடன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் கருமையான திட்டுக்கள் உள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
4. பால்
* பாலில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது சரும நிறமியைக் குறைக்க உதவி புரியும்.
* அதற்கு காய்ச்சாத பாலை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் இரண்டு முறை பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள கருமையான திட்டுக்களைப் போக்கலாம்.
5. வெங்காயம்
* வெங்காயத்தில் சல்பர் உள்ளது. இந்த வெங்காயத்தின் சாற்றினை கருமையான திட்டுக்கள் உள்ள இடத்தில் தடவ வேண்டும்.
* பின் அதை 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி ஒரு வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வர, முகத்தில் உள்ள கருமை நீங்கிவிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications