Latest Updates
-
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்!
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப 1 ஸ்பூன் தேனை அடிக்கடி இப்படி யூஸ் பண்ணுங்க...
Skin Care Tips In Tamil: பல நூற்றாண்டுகளாக நமது சரும பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருள் தான் தேன். இந்த தேன் ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டது. குறிப்பாக இதில் ஆன்டி-பாக்டீரியல், மாய்ஸ்சுரைசிங் மற்றும் குணப்படுத்தும் பண்புகள் உள்ளன.
எனவே தான் பல்வேறு சரும பராமரிப்பு பொருட்களில் தேன் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதுவும் இந்த தேன் அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்றது. பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கக்கூடியது. முக்கியமாக சரும பொலிவை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.

உங்கள் முகம் பொலிவிழந்து காணப்படுகிறதா? உங்கள் முகப்பொலிவை மேம்படுத்த வேண்டுமா? அதுவும் வீட்டிலேயே மேம்படுத்த நினைக்கிறீர்களா? அப்படியானால் தேனைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வாருங்கள்.
அதுவும் அந்த தேனுடன் நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களை சேர்த்து ஃபேஸ் பேக் போட்டால், முகம் நன்கு பளிச்சென்று பிரகாசமாக ஜொலிப்பதோடு, சரும நிறமும் மேம்படும். இப்போது சரும பொலிவை மேம்படுத்த உதவும் சில தேன் ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.
1. மஞ்சள் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, ரோஸ் வாட்டர் சிறிது ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் 1-2 முறை பயன்படுத்தலாம்.
2. தயிர் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் சிறிது தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் 2 முறை பயன்படுத்தலாம்.
3. எலுமிச்சை மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒருமுறை பயன்படுத்தலாம். அதுவும் மாலை வேளையில் பயன்படுத்த வேண்டும்.
* முக்கியமாக இந்த ஃபேஸ் பேக்கை சென்சிடிவ் சருமத்தினர் அல்லது காயங்களைக் கொண்டவர்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
4. காபி மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூளை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி வட்ட சுழற்சியில் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒருமுறை பயன்படுத்தினால், சருமம் மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
5. கற்றாழை மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்துவதன் மூலம், சருமம் பளிச்சென்று பொலிவாக காட்சியளிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications