Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்க முகம் ரொம்ப டல்லா இருக்கா? அப்ப இந்த நேச்சுரல் டோனரை தினமும் யூஸ் பண்ணுங்க..
Skin Care Tips In Tamil: ஒவ்வொருவருக்கும் அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக பல்வேறு சரும பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். அதில் ஒன்று தான் டோனர். இந்த டோனர் சருமத்தின் pH அளவை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவி புரிந்து, சருமத்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
முக்கியமாக டோனர் சருமத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக நீக்கி, சருமத்திற்கு பொலிவையும், புத்துணர்ச்சியையும் தரும். அதோடு டோனர் சருமத்துளைகள் இறுக்கமடையச் செய்து, சருமத்துளைகளில் அழுக்குகள் சேர்வதைக் குறைக்கும்.

இப்படிப்பட்ட டோனரை நம் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டே தயாரிக்கலாம். கீழே குளிர்காலத்தில் பயன்படுத்த ஏற்ற சில நேச்சுரல் டோனர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு ஏற்றதை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.
1. விட்ச் ஹேசல் டோனர்
* இந்த டோனர் செய்வதற்கு ஒரு பௌலில் 4 டேபிள் ஸ்பூன் ஆல்கஹால் இல்லாத விட்ச் ஹேசலை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் சில துளிகள் நறுமண எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அவற்றை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, முகத்தில் ஸ்ப்ரே செய்ய வேண்டும்.
* ஆனால் இதை பயன்படுத்தும் முன் சருமத்தில் பேட்ச் டெஸ்ட் செய்து பாருங்கள்.
2. கற்றாழை டோனர்
* இந்த டோனர் செய்வதற்கு ஒரு பௌலில் 1/2 கப் ரோஸ் வாட்டரை எடுத்து, அத்துடன் 1/2 கப் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவ வேண்டும். இப்படி தினமும் பயன்படுத்தி வந்தால், முகத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
3. ரோஸ் வாட்டர் டோனர்
* ரோஸ்வாட்டர் சருமத்தில் உள்ள அழுக்கை நீக்குவதிலும், சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிப்பதிலும் சிறந்தது. அதோடு இது நல்ல மணத்தைக் கொண்டதால், சிறந்த நேச்சுரல் டோனரை தேடுபவர்கள், இந்த ரோஸ் வாட்டரை சருமத்தில் தடவலாம்.
* இல்லாவிட்டால் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டருடன், 1 டேபிள் ஸ்பூன் ஆல்கஹால் இல்லாத விட்ச் ஹாசலை சேர்த்து கலந்து, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, முகத்தில் ஸ்ப்ரே செய்யலாம்.
4. க்ரீன் டீ டோனர்
* க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அதற்கு 1/3 கப் க்ரீன் டீயுடன் , 3-4 துளிகள் டீ-ட்டீ ஆயிலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, முகத்தில் ஸ்ப்ரே செய்ய வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.
5. வெள்ளரிக்காய் டோனர்
* இந்த டோனர் செய்வதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாற்றினை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஆல்கஹால் இல்லாத விட்ச் ஹாசலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, பின் முகத்தில் ஸ்ப்ரே செய்ய வேண்டும்.
குறிப்பு: என்ன தான் நேச்சுரல் டோனர்களாக இருந்தாலும், அவற்றை எடுத்ததும் முகத்தில் பயன்படுத்தும் முன், கையில் பேட்ச் டெஸ்ட் செய்து, அதற்கு அழற்சி உள்ளதா என்பதை பார்த்து, அதன் பின்னரே முகத்தில் பயன்படுத்த வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications