Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
பார்லர் போகாமலே வெள்ளையாகணுமா? இந்த ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. பளிச்சுன்னு வெள்ளையா ஜொலிப்பீங்க..
Skin Care Tips In Tamil: முகம் பொலிவாகவும் பிரகாசமாகவும் இருக்க கடைகளில் விற்கப்படும் விலையுயர்ந்த கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி பலரும் பயன்படுத்துவதுண்டு. ஆனால் அனைவராலுமே இப்படி விலையுயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்த முடியாது.
மேலும் தற்போது நிறைய பேர் இயற்கை வழிகளை நாடுகின்றனர். அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே தங்களின் சரும அழகை மேம்படுத்த விரும்புகின்றனர்.

கெமிக்கல் இல்லாத பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுக்கும் போது, சருமமானது நீண்ட காலம் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். ஒருவரது முகம் பொலிவிழந்து காணப்படுவதற்கு சருமத்தில் உள்ள இறந்த செல்கள் தான்.
இந்த இறந்த செல்களை நீக்க வேண்டுமானால் ஸ்க்ரப் செய்ய வேண்டும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும் பொருட்கள் சமையலறையில் அதிகம் உள்ளன. அந்த பொருட்களைக் கொண்டு அடிக்கடி பராமரிப்பு கொடுத்து வந்தால், பார்லர் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. இப்போது சரும பொலிவை அதிகரித்து, சருமத்தை வெள்ளையாக காட்டும் சில நேச்சுரல் ஃபேஸ் ஸ்க்ரப்புகளைக் காண்போம்.
1. ஓட்ஸ் மற்றும் தேன் ஸ்க்ரப்
தேவையான பொருட்கள்:
* ஓட்ஸ் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
* தேன் - 1 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 1 டீஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
* முதலில் ஒரு பௌலில் ஓட்ஸ் பொடி, தேன் மற்றும் தயிரை எடுத்து கெட்டியான பேஸ்ட்டாக கலந்து கொள்ள வேண்டும்.
* பின் முகத்தை ஈரப்படுத்தி, தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை முகத்தில் தடவி, மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. பப்பாளி மற்றும் தேன் ஸ்க்ரப்
தேவையான பொருட்கள்:
* கனிந்த பப்பாளி - 2 டேபிள் ஸ்பூன்
* தேன் - 1 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
* ஒரு பௌலில் நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, அத்துடன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் முகத்தை நீரால் கழுவி, துடைக்க வேண்டும்.
* அதன் பின் தயாரித்து வைத்துள்ள பப்பாளி பேஸ்ட்டை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, 10-15 நிமிடம் ஊறு வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
3. வாழைப்பழம் மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்
தேவையான பொருட்கள்:
* கனிந்த வாழைப்பழம் - 1
* சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
* முதலில் நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் முகத்தை கழுவி, ஈரப்பதமான முகத்தில் வாழைப்பழத்தை தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்து, சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4. நாட்டுச் சர்க்கரை மற்றும் தேன் ஸ்க்ரப்
தேவையான பொருட்கள்:
* நாட்டுச் சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
* தேன் - 1 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
* முதலில் ஒரு பௌலில் நாட்டுச் சர்க்கரை மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் முகத்தை கழுவி விட்டு, ஈரப்பதமான முகத்தில் இதைத் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பின்பு 3 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
5. காபி ஸ்க்ரப்
தேவையான பொருட்கள்:
* காபித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
* முதலில் ஒரு பௌலில் காபித் தூளை எடுத்து, அதில் ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி சில நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு சிறிது நேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள ஸ்க்ரப்புகள் அனைத்தும், சருமத்தில் உள்ள இறந்த செல்களை முழுமையாக வெளியேற்றி, சருமத்தை பொலிவோடும், பிரகாசமாகவும் வைத்துக் கொள்ளும். ஆனால் ஸ்க்ரப்புகளை வாரத்திற்கு 2-3 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். முக்கியமாக முதன்முறையாக ஒரு பொருளை சருமத்தில் பயன்படுத்தும் முன், அது சருமத்திற்கு ஏற்றதா என்பதை கண்டறிய, கையில் தடவி பேட்ச் டெஸ்ட் செய்து பார்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications