Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்க கை, கால்கள் கருப்பா இருக்கா? அப்ப இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க... வெள்ளையாகும்..
Skin Care Tips In Tamil: நமது உடலிலேயே வெயிலின் தாக்கத்திற்கு அதிகம் உள்ளாகக்கூடிய பகுதி என்றால் அது, முகம், கை, கால்கள் தான். இவற்றில் முகத்திற்கு நாம் நிறைய பராமரிப்புக்களைக் கொடுப்பதால், முகச் சருமத்தின் நிறமானது சேதமடையாமல் பாதுகாக்கப்படுகிறது.
ஆனால் கை, கால்கள் போன்ற பகுதிகளுக்கு குறைவாகவே பராமரிப்புக்களைக் கொடுக்கிறோம். இதனால் கை, கால்கள் அதிக வெயிலின் தாக்கத்தால் கருமையாகி அசிங்கமாக காட்சியளிக்கும். உங்களின் கை, கால்களும் அப்படி தான் கருப்பாக உள்ளதா? இப்படி கருப்பாக இருக்கும் கை, கால்களை வெள்ளையாக்க வேண்டுமா?

அப்படியானால் கை, கால்களுக்கு பராமரிப்புக்களைக் கொடுக்க தொடங்குங்கள். அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்தை ஸ்க்ரப் செய்யும் போது, கை, கால்களில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, கை, கால் சருமத்தின் நிறம் மேம்படும். இப்போது கை, கால்களில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.
1. உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை சாறு
* இதற்கு முதலில் ஒரு பௌலில் உருளைக்கிழங்கு விழுது மற்றும் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை கை மற்றும் கால்களில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், கை, கால்களில் உள்ள கருமையை நீங்குவதைக் காணலாம்.
2. ஓட்ஸ், எலுமிச்சை சாறு மற்றும் தயிர்
* இதற்கு ஒரு பௌலில் ஓட்ஸ் பொடியை எடுத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை கை, கால்களில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மென்மையாக தேய்த்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* பிறகு மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும்.
* இப்படி வாரம் ஒருமுறை பயன்படுத்தி வந்தால், கை, கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பளிச்சென்று இருக்கும்.
3. தக்காளி
* இதற்கு நன்கு கனிந்த தக்காளியை எடுத்து வெட்டி, ஒரு தக்காளி துண்டை எடுத்து, சர்க்கரை தொட்டு, கை, கால்களில் மென்மையாக சிறிது நேரம் தேய்க்க வேண்டும்.
* பின் 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
4. மில்க் க்ரீம், ஆரஞ்சு மற்றும் சந்தன பவுடர்
* இதற்கு ஒரு பௌலில் மில்க் க்ரீம், ஆரஞ்சு பவுடர் மற்றும் சந்தன பவுடரை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை கை, கால்களில் தடவி, 30-35 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், கை, கால் கருமை நீங்கி பொலிவாவதைக் காணலாம்.
5. சோள மாவு, மஞ்சள் மற்றும் தேன்
* இதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு, 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை கை, கால்களில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இதை வாரம் 2 முறை பயன்படுத்தி வர, கை, கால் கருமை நீங்குவதைக் காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications