Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
உங்க முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? அப்ப கடலை மாவை இப்படி யூஸ் பண்ணுங்க..
Skin Care Tips In Tamil: பெண்களுள் பலர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் முகத்தில் முடி வளர்வது. இப்படி முகத்தில் வளரும் முடியைப் போக்க பெண்கள் பலரும் வேக்சிங் செய்வார்கள். இன்னும் சிலர் ரேசரை பயன்படுத்தி முடியை அகற்றுவார்கள். இன்னும் சில பெண்கள் இப்பிரச்சனைக்காக விலையுயர்ந்த சிகிச்சைகளையும் மேற்கொள்வார்கள்.
இப்படி எவ்வளவு பணம் செலவழித்து சிகிச்சை மேற்கொண்டாலும், அது தற்காலிக தீர்வை மட்டுமே வழங்கும். அதோடு சில சமயங்களில் எரிச்சலையும் உண்டாக்கும். ஆனால் இயற்கை வழிகளின் மூலம் தீர்வு காண முயற்சித்தால், செலவுகளும் குறைவு, பக்கவிளைவுகளும் இருக்காது. அப்படி முகத்தில் வளரும் முடியை நீக்க உதவும் ஒரு அற்புதமான பொருள் தான் கடலை மாவு.

கடலை மாவில் புரோட்டீன் அதிகம் உள்ளது மற்றும் இது சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும் மற்றும் சரும நிறத்தை மேம்படுத்தும் பண்புகள் உள்ளன. எனவே இதைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கும் போது, சருமம் சுத்தமாவதோடு, சருமத்தில் வளரும் முடி நீக்கப்படுவதோடு, அதன் வளர்ச்சியும் படிப்படியாக குறையும். கீழே முகத்தில் வளரும் முடியை நீக்க உதவும் சில கடலை மாவு ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. கடலை மாவு மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டீஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் தேன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, சிறிது நேரம் காய வைக்க வேண்டும்.
* அதன் பின் நீரில் நனைத்த துணியால் முடி வளரும் எதிர்திசையை நோக்கியவாறு துடைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.
2. கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டீஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் நீரைப் பயன்படுத்தி மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.
3. கடலை மாவு மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டீஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் நீரைப் பயன்படுத்தி மென்மையாக தேய்த்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.
4. கடலை மாவு மற்றும் பப்பாளி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டீஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் பப்பாளி கூழ் மற்றும் 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் கைகளை நீரில் நனைத்து, முடி வளரும் எதிர்திசையை நோக்கி மென்மையாக தேய்க்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.
5. கடலை மாவு மற்றும் பருப்பு ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு முதலில் 2 டீஸ்பூன் துவரம் பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த துவரம் பருப்பு பொடியை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் கடலை மாவு மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி காய வைக்க வேண்டும்.
* அடுத்து நீரைப் பயன்படுத்தி, முடி வளரும் எதிர்திசையை நோக்கி மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 3-4 முறை பயன்படுத்த நல்ல பலனைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications