Latest Updates
-
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம்
முகப்பரு உங்க அழகை கெடுக்குதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை வாரம் 2 முறை போடுங்க..
Skin Care Tips In Tamil: ஆண்கள், பெண்கள் என இருபாலரும் சந்திக்கும் ஒரு பொதுவான சரும பிரச்சனை தான் முகப்பரு. இந்த முகப்பருக்கள் ஒருவரது முக அழகை கெடுப்பது மட்டுமின்றி, மிகுந்த வலியையும் உண்டாக்கும்.
இப்படியான முகப்பருக்கள் வருவதற்கு சருமத்தில் எண்ணெய் சுரப்பு அதிகமாக இருப்பது, அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் தேங்கியிருப்பது, கைகளால் அடிக்கடி முகத்தை தொடுவது போன்றவை மட்டுமின்றி, போதுமான சரும பராமரிப்புக்களைக் கொடுக்காமல் இருப்பதும் காரணமாகும்.

இந்த முகப்பருக்களை போக்க பலர் கடைகளில் விற்கப்படும் பல கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் சில சமயங்களில் அவை முகப்பருக்களை போக்குவதற்கு பதிலாக, நிலைமையை மோசமாக்கலாம்.
அதுவே நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டால், பக்கவிளைவுகள் ஏதும் இருக்காது மற்றும் முகப்பருக்களும் நீங்கி, முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும். கீழே முகப்பருக்களைப் போக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. க்ரீன் டீ மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் சிறிது க்ரீன் டீயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கானது முகப்பரு சருமத்தினருக்கும், சென்சிடிவ் சருமத்தினருக்கும் ஏற்றது.
2. ஓட்ஸ் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வெதுவெதுப்பான க்ரீன் டீ அல்லது நீரை ஊற்றி பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
3. வேப்பிலை மற்றும் முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் வேப்பிலை பொடி மற்றும் முல்தானி மெட்டி பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் ரோஸ்வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவிவிட்டு, முகத்தை துடைத்துவிட்டு, மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.
4. வாழைப்பழம் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த வாழைப்பழத்தை துண்டுகளாக்கி சேர்த்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் ரோஸ் வாட்டர் அல்லது தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
5. தேன் மற்றும் பட்டை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் பட்டை தூளை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











