Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
நீண்ட காலம் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை வாரம் 2 முறை போடுங்க..
Skin Care Tips In Tamil: பொதுவாக வயது அதிகரிக்கும் போது முகத்தில் சுருக்கங்களும், முதுமைக் கோடுகளும் தெரியத் தொடங்கும். அதுவும் முறையான சரும பராமரிப்பை கொடுக்காமல் இருந்தால், சீக்கிரமே இந்த சரும சுருக்கங்களையும், வயதான தோற்றத்தையும் பெறக்கூடும். உங்கள் முகத்திலும் இப்படியான சரும சுருக்கங்கள் தெரிய தொடங்குகிறதா?
ஆனால் நீங்கள் நீண்ட காலம் இளமையாக காட்சியளிக்க வேண்டுமா? அப்படியானால் சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ள உதவும் ஒருசில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளைப் போடுங்கள். இப்படி போடும் ஃபேஸ் பேக்குகள் சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தி, சருமத்தை நீண்ட காலம் இளமையாக வைத்துக் கொள்ள உதவும். இப்போது முதுமைத் தோற்றத்தைத் தடுக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.

1. வெள்ளிரிக்காய் கற்றாழை மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சிறிது வெள்ளரிக்காயை எடுத்து அரைத்து பேஸ்ட் செய்து சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி, நன்கு காய வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. முட்டை மஞ்சள் கரு மற்றும் தேன் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2-3 துளிகள் நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, நன்கு காய வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
3. வாழைப்பழம், தயிர் மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, நன்கு காய வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4. மஞ்சள் மற்றும் தயிர் ஃபேஸ் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் தயிரை எடுத்து, அத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
5. ஆரஞ்சு ஜூஸ் மற்றும் தேன் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1/2 கப் ஆரஞ்சு ஜூஸை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2-3 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை சருமத்தில் தடவி, நன்கு காய வைக்க வேண்டும்.
* பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications