Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உங்களுக்கு முகப்பரு அதிகமா வருமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க...
Skin Care Tips In Tamil: நீங்கள் முகப்பரு பிரச்சனையால் அதிகம் அவதிப்படுகிறீர்களா? இந்த முகப்பரு பிரச்சனைக்கு முடிவு கட்ட எத்தனையோ வழிகளை மற்றும் எத்தனையோ க்ரீம்களை வாங்கி பயன்படுத்தியுள்ளீர்களா? இருப்பினும் உங்களுக்கு முகப்பரு வருவது குறைந்தபாடில்லையா? இருந்தாலும் உங்களுக்கு வரும் முகப்பருக்களை தடுக்க வேண்டுமா?
அப்படியானால் நம் வீட்டு சமையலறையில் உள்ள மருத்துவ பண்புகள் நிறைந்தப் பொருட்களைக் கொண்டு ஒருசில ஃபேஸ் பேக்குகளை போடுங்கள். இப்படி இயற்கை பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடும் போது, அதன் விளைவாக முகப்பரு தடுக்கப்படுவதோடு, சரும செல்களின் ஆரோக்கியம் மேம்பட்டு, முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும். கீழே முகப்பருக்களை தடுக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. க்ரீன் டீ மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் சிறிது க்ரீன் டீயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் இரவு தூங்கும் முன் பயன்படுத்தி வந்தால், முகப்பரு வருவது குறையும்.
2. ஓட்ஸ் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது வெதுவெதுப்பான நீர் அல்லது க்ரீன் டீயை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
3. பப்பாளி மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த பப்பாளி பழத்தை எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தேனை சேர்த்து கலந்து, அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* அடுத்து முகத்தை உலர்த்திய பின் லேசான மாய்ஸ்சுரைசர் அல்லது கற்றாழை ஜெல்லை தடவ வேண்டும்.
4. வேப்பிலை மற்றும் முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் வேப்பிலை பவுடர் மற்றும் முல்தானி மெட்டி பவுடரை ஒன்றாக எடுத்து, ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இறுதியாக முகத்தை உலர்த்திய பின், லைட் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.
5. வாழைப்பழம் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை சிறிது எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள் சேர்த்து, வேண்டுமானால் சிறிது ரோஸ் வாட்டர் அல்லது தேனை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இறுதியாக மாய்ஸ்சுரைசரை தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications