Latest Updates
-
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா?
உங்க வாயை சுற்றி கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க..
Skin Care Tips In Tamil: சிலருக்கு வாயைச் சுற்றியுள்ள பகுதி மட்டும் கருப்பாக இருக்கும். இப்படி வாயைச் சுற்றியுள்ள பகுதி கருமையாக இருக்க பல காரணங்கள் உள்ளன. அதில் அதிகப்படியான மெலனின் உற்பத்தி, ஹார்மோன் மாற்றங்கள், வறட்சி அல்லது நீரிழப்பு, புகைப்பிடிப்பது, காப்ஃபைன் அதிகம் அருந்துவது அல்லது போதுமான சரும பராமரிப்பை கொடுக்காமல் இருப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இப்படி வாயைச் சுற்றியிருக்கும் பகுதி கருப்பாக இருப்பது ஒரு தீவிரமான நிலையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது ஒருவரது தன்னம்பிக்கையை பாதிக்கும். உங்கள் வாயைச் சுற்றியும் இப்படி கருமையாக உள்ளதா? அப்படியானால் கவலைப்படாதீர்கள். அதை இயற்கை வழிகளின் மூலம் எளிதில் சரிசெய்யலாம். கீழே வாயைச் சுற்றியுள்ள கருமையைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. கற்றாழை ஜெல் மற்றும் தேன் பேக்
* இந்த பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைக்கலாம் அல்லது 20 நிமிடம் ஊற வைத்து கழுவலாம்.
* இந்த ஃபேஸ் பேக்கை தினமும் என தொடர்ந்து 4-6 வாரங்கள் வரை பயன்படுத்தி வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
2. உருளைக்கிழங்கு சாறு
* உருளைக்கிழங்கில் உள்ள அமிலம் சரும கருமையைப் போக்கும் திறன் கொண்டது.
* இந்த உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, பஞ்சுருண்டையைப் பயன்படுத்தி, முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும்.
3. மஞ்சள் மற்றும் தயிர் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுதது, அத்துடன் தயிர் அல்லது தேன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில், குறிப்பாக வாயைச் சுற்றியுள்ள பகுதியில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தலாம்.
4. க்ரீன் டீ டோனர்
* இதற்கு நல்ல சூடான நீரில் க்ரீன் டீ பையை ஊற வைக்க வேண்டும்.
* பின் தயாரித்த அந்த க்ரீன் டீயை பஞ்சுருண்டையில் நனைத்து, முகத்தில் தடவி காய வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் காலை, இரவு என இரண்டு வேளை பயன்படுத்தலாம்.
5. ஆப்பிள் சீடர் வினிகர்
* ஆப்பிள் சீடர் வினிகர் சருமத்தின் pH அளவை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவுவதோடு, கருமையை போக்க உதவும்.
* இந்த ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு பங்கு எடுத்து, அத்துடன் சம அளவில் நீரை கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை பஞ்சுருண்டையில் நனைத்து முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் 1 முறை பயன்படுத்தலாம்.
6. பப்பாளி பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.
7. எலுமிச்சை
* எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமத்தில் உள்ள கருமையைப் போக்க உதவும்.
* அதற்கு எலுமிச்சை சாற்றினை சம அளவு நீரில் கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.
* ஆனால் இதை இரவு நேத்தில் பயன்படுத்துவதே சிறந்தது.
8. காய்ச்சாத பால்
* காய்ச்சாத பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள கருமையை போக்குவதோடு, சருமத்தை நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்ளும்.
* அதற்கு பாலை பஞ்சுருண்டையில் நனைத்து, முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் காலை, இரவு என இரண்டு வேளை பயன்படுத்தலாம்.
9. ஓட்ஸ் மற்றும் தேன் ஸ்க்ரப்
* இந்த ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஈரப்பதமான முகத்தில் தடவி, சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
* அதன் பின் 5-10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த நல்ல மாற்றத்தைக் காணலாம்.
10. தக்காளி ஃபேஸ் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு தக்காளியை நன்கு அரைத்து, அதை முகத்தில் தடவ வேண்டும்.
* பின் 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











