Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
வெயிலால் முகம் கருப்பா மாறுதா? அப்ப தயிரை வெச்சு இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க...
Skin Care Tips In Tamil: ஒவ்வொருவருமே தங்களின் முகம் எப்போதும் பிரகாசமாகவும், சரும பிரச்சனைகளின்றியும் இருக்க வேண்டுமென்று விரும்புவோம். இதற்காக சருமத்திற்கு பலவிதமான பராமரிப்புக்களையும் கொடுத்து பாதுகாத்து வருவோம். ஆனால் கோடைக்காலம் வந்துவிட்டால், இவை அனைத்தும் பாழாகி, சருமத்தில் பலவிதமான பிரச்சனைகளை சந்திப்பதோடு, சருமமும் வெயிலால் கருமையாகத் தொடங்கும்.
ஆனால் நீங்கள் உங்கள் முகம் வெயில் காலத்தில் கருமையாகக்கூடாது என்று விரும்பினால், ஒருசில பொருட்களைக் கொண்டு தினமும் தவறாமல் பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். முக்கியமாக ஃபேஸ் பேக்குகளைப் போட வேண்டும்.

வெயிலால் முகம் கருமையாகாமல், பளிச்சென்று வெள்ளையாகவே இருக்க வேண்டுமானால், அதற்கு நம் வீட்டில் உள்ள தயிர் பெரிதும் உதவி புரியும். ஏனெனில் தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தில் உள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் வெளியேற்றி, சரும செல்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
முக்கியமாக தயிர் மெலனின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது. இப்படிப்பட்ட தயிரை ஒருசில பொருட்களுடன் சேர்த்து ஃபேஸ் பேக் தயாரித்து கோடைக்காலத்தில் பயன்படுத்தி வந்தால், முகம் கருமையாகாமல் வெள்ளையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். இப்போது சரும கருமையைப் போக்கும் சில தயிர் ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.
ஃபேஸ் பேக் #1
* ஒரு பௌலில் 1-2 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அதை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம், கழுத்து மற்றும் கருமையாக இருக்கும் கைகளில் தடவி 3-5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
* அதன் பின் 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வந்தால், சருமத்தில் உள்ள கருமையை அகற்றலாம்.
ஃபேஸ் பேக் #2
* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி 3-5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பின்பு அதை 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர, சருமம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
ஃபேஸ் பேக் #3
* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவுடன், சிறிது தயிரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம், கழுத்து மற்றும் கருமையாக இருக்கும் கைகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பின்பு அதை 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வந்தால், கருமையாக இருக்கும் சருமம் வெள்ளையாக மாறுவதைக் காணலாம்.
ஃபேஸ் பேக் #4
* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 1/2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.
* பின்பு 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வந்தால், சரும கருமை விரைவில் நீங்கும்.
ஃபேஸ் பேக் #5
* முதலில் 4-5 ஸ்ட்ராபெர்ரியை துண்டுகளாக்கி, பிளெண்டரில் போட்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வந்தால், முகம் பளிச்சென்று பொலிவோடு மின்னும்.



Click it and Unblock the Notifications