Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
முகப்பரு தழும்புகள் அழகை கெடுக்குதா? இந்த ஃபேஸ் பேக்கை தொடர்ந்து 4 நாள் போடுங்க.. போயிடும்..
Skin Care Tips In Tamil: நாம் ஒவ்வொருவருமே பிரச்சனைகள் இல்லாத சுத்தமான மற்றும் அழகான சருமத்தைப் பெற விரும்புவோம். ஆனால் தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல், உணவுப் பழக்கம், சூரிய வெளிப்பாடு, தவறான சரும பராமரிப்பு பொருட்கள், மன அழுத்தம் போன்றவற்றால் சருமத்தில் முகப்பருக்கள் வருவதோடு, அந்த பருக்கள் போகும் போது கருமையான தழும்புகளை விட்டு செல்கின்றன.
மேலும் இந்த தழும்புகள் முக அழகை மோசமாக பாதிக்கின்றன. முகத்தில் பருக்களால் வரும் கருமையான தழும்புகள் மற்றும் கருமையான கறைகளை எப்படி போக்குவது என்று தெரியாமல் பலரும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் அப்படி புலம்புகிறீர்களானால் இக்கட்டுரை உங்களுக்கானது.

ஏனெனில் கீழே முகத்தின் அழகை கெடுக்கும் கருமையான தழும்புகளைப் போக்கும் சில எளிய ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஃபேஸ் பேக்குகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், விரைவில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
உருளைக்கிழங்கு மற்றும் அரிசி மாவு ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு உருளைக்கிழங்கை எடுத்து அதைத் துருவி, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவை எடுத்து, உருளைக்கிழங்கு சாற்றினை சேர்த்து கலந்து 10 நிமிடம் தனியாக ஊற வைக்க வேண்டும். பின் அதில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி நன்கு காய்ந்ததும், குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள கருமையான தழும்புகள் மறையும்.
வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு சாறு
உருளைக்கிழங்கு சாறு மற்றும் வெள்ளரிக்காய் சாற்றினை சரிசம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் முகத்தில் பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள தழும்புகள் விரைவில் மறையத் தொடங்கும்.
பாதாம் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
இரவு தூங்கும் முன் சிறிது பாதாமை நீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் பாதாமின் தோலை நீக்கிவிட்டு, அதை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் சில துளிகள் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை கருமையான தழும்புகள் மற்றும் கருமையான கறைகள் உள்ள பகுதியில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்த நல்ல மாற்றத்தைக் காணலாம்.
மஞ்சள் மற்றும் தேன் மாஸ்க்
தேனில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன மற்றும் இவை சரும பிரச்சனைகளைத் தடுக்க உதவுகின்றன. அதுவும் அந்த தேனில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை தினமும் 2 முறை பயன்படுத்த நல்ல மாற்றத்தைக் காணலாம்.
மஞ்சள், தயிர் தற்றும் பாதாம் எண்ணெய் மாஸ்க்
முகத்தில் உள்ள அசிங்கமான மற்றும் கருமையான தழும்புகள் அல்லது கறைகளைப் போக்க மஞ்சள், மயிர் மற்றும் பாதாம் எண்ணெய் ஃபேஸ் பேக் பெரிதும் உதவி புரியும். அதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தயிருடன், 3-ஜ துளிகள் பாதாம் எண்ணெய் மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் பயன்படுத்தி வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
பால் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
பால், தேன் ஆகிய இரண்டிலுமே சருமத்தை வெள்ளையாக்கும் பண்புகள் உள்ளன. இந்த இரண்டையும் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், முகத்தில் உள்ள கருமையான தழும்புகள் முழுமையாக நீங்கும். அதற்கு சிறிது காய்ச்சாத பாலுடன் தேன் சேர்த்து கலந்து, அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் பயன்படுத்தி வந்தால், ஒரு நல்ல மாற்றம் முகத்தில் தெரியும்.



Click it and Unblock the Notifications











