Latest Updates
-
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம்
உங்க முகத்தில் பிம்பிள் அதிகமா வருதா? இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க...
Skin Care Tips In Tamil: கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் இன்னும் ஒரு வாரத்தில் கத்திரி வெயில் தொடங்கவுள்ளது. இக்காலத்தில் வெயில் இன்னும் பயங்கரமாக இருக்கும். அதோடு அளவுக்கு அதிகமாகவும் வியர்க்கும். இப்படி சருமம் அதிகம் வியர்ப்பதோடு, எண்ணெய் பசையுடனும் இருந்தால், முகத்தில் பருக்கள் அல்லது பிம்பிள் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.
மற்ற காலங்களை விட கோடைக்காலத்தில் தான் முகப்பரு பிரச்சனையால் நிறைய பேர் அவதிப்படுவார்கள். உங்களுக்கும் அப்படி தான் என்றால், இந்த முகப்பருக்களைப் போக்க முயற்சிக்க வேண்டும். முகத்தில் பருக்கள் வராமல் இருப்பதற்கு ஏராளமான அழகு பராமரிப்பு பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டு வந்தாலும், அனைவருக்குமே அது நல்ல பலனைத் தருவதில்லை.

ஆனால் நம் வீட்டில் உள்ள இயற்கை பொருட்களைக் கொண்டு முகத்தில் ஃபேஸ் பேக் போடுவதன் மூலம், முகப்பருக்களைத் தடுக்கலாம். மேலும் சரும அழகையும் மேம்படுத்தலாம். இப்போது முகப்பருக்களை வராமல் தடுக்கும் சில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளைக் காண்போம். இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போட்டு வந்தால், பிம்பிள் வருவதைத் தடுக்கலாம்.
1. எலுமிச்சை தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் முகத்தை நீரில் கழுவி துணியால் துடைத்துவிட்டு, பின்பு தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம், முகத்தில் பிம்பிள் வருவது தடுக்கப்படுவதோடு, முகப்பரு தழும்புகள் இருந்தாலும் மறையும்.
2. முல்தானி மெட்டி மற்றும் தயிர் பேக்
* ஒரு பௌலில் சிறிது முல்தானி மெட்டி பொடியை எடுத்து, அத்துடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கால் முகப்பரு தடுக்கப்படுவதோடு, முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
3. முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் பேக்
* முதலில் ஒரு பௌலில் முல்தானி மெட்டி பொடியை எடுத்து, ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் முழுவதும் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் பிம்பிளைப் போக்க உதவுவதோடு, சரும நிறத்தையும் மேம்படுத்தும்.
4. வேப்பிலை ஃபேஸ் பேக்
* வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், இது பிம்பிளைப் போக்க பெரிதும் உதவி புரியும்.
* அதற்கு ஒரு பௌலில் சிறிது வேப்பிலை பொடியை எடுத்து, ரோஸ் வாட்டர், தயிர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
5. மஞ்சள் ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் சிறிது மஞ்சள் தூளை எடுத்து, தயிர் அல்லது நீர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி பயன்படுத்தி வந்தால், முகப்பரு வருவது தடுக்கப்படும் மற்றும் முகமும் பிரகாசமாக இருக்கும்.
6. பேக்கிங் சோடா மற்றும் முட்டை பேக்
* முதலில் ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, சிறிது பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இதனால் முகப்பரு தடுக்கப்படுவதோடு, கரும்புள்ளி மற்றும் வெள்ளைப்புள்ளிகளும் அகற்றப்படும்.
7. ஆப்பிள் சீடர் வினிகர் பேக்
* முகப்பருவைப் போக்க ஆப்பிள் சீடர் வினிகர் பெரிதும் உதவி புரியும்.
* அதற்கு ஒரு பௌலில் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் நீரை சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
8. ஜாதிக்காய் பேக்
* முதலில் ஒரு பௌலில் சிறிது ஜாதிக்காய் பொடி மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்ய வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒருமுறை பயன்படுத்துவதன் மூலம், முகப்பரு தடுக்கப்படுவதோடு, முகமும் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
9. துளசி ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் துளசி பொடி மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.
10. ரோஸ் வாட்டர் எலுமிச்சை பேக்
* ஒரு பெளலில் 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை இரவு தூங்கும் முன் முகத்தில் பிம்பிள் உள்ள இடத்தில் தடவி, இரவு முழுவதும் காய வைக்க வேண்டும்.
* மறுநாள் காலையில் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், விரைவில் முகப்பரு மறைந்துவிடும்.



Click it and Unblock the Notifications