Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
நீங்க வெள்ளையாகணுமா? அப்ப 1 ஸ்பூன் மஞ்சள் தூளை இப்படி யூஸ் பண்ணுங்க..
Skin Care Tips In Tamil: தற்போது சருமத்திற்கு பராமரிப்பு அளிக்கும் ஏராளமான பொருட்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. அதுவும் அதிக விலை முதல் விலை குறைவு வரை அனைவரும் வாங்கி பயன்படுத்தும் வகையில் சரும பராமரிப்பு பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன.
ஆனால் இப்படியான கெமிக்கல் கலந்த பொருட்களை சருமத்திற்கு வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக, நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுத்து வந்தால், சரும ஆரோக்கியமும் மேம்படும், பாதுகாப்பானதும் கூட.

அதுவும் பழங்காலம் முதலாக நம் முன்னோர்களால் சரும அழகை மேம்படுத்த பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு பொருள் தான் மஞ்சள். இந்த மஞ்சள் ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டவை. முக்கியமாக இதில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இவை சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்கும்.
இப்படிப்பட்ட மஞ்சளைக் கொண்டு சருமத்தை பளிச்சென்று பிரகாசமாகவும், சரும நிறத்தை மேம்படுத்தவும் நினைத்தால், பின்வருமாறு ஃபேஸ் பேக்குகளை போடுங்கள். இப்போது சரும நிறத்தை மேம்படுத்த மஞ்சளை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைக் காண்போம்.
1. மஞ்சள், அரிசி மாவு, பால் மற்றும் தேன்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் அரிசி மாவுடன், சிறிது மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது பால் மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 1 முறை பயன்படுத்தி வர முகம் பளிச்சென்று பிரகாசமாக ஜொலிக்கும்.
2. மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறு
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் மஞ்சள் தூளை எடுத்து, எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்குவதோடு, முகப்பருக்களைக் குறைக்கும். அதோடு சரும நிறத்தையும் மேம்படுத்தும்.
3. மஞ்சள், கடலை மாவு மற்றும் தயிர்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் தூளை ஒன்றாக எடுத்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மென்மையாக ஸ்க்ரப் செய்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4. மஞ்சள் மற்றும் தயிர்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் மஞ்சள் தூளை எடுத்து, தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி பயன்படுத்தி வந்தால், முகப்பரு தழும்புகள் மறைவதோடு, முகம் பளிச்சென்று பிரகாசமாக ஜொலிக்கும்.
5. மஞ்சள், தேங்காய் எண்ணெய், அரிசி மாவு மற்றும் கடலை மாவு
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் அரிசி மாவு, கடலை மாவை சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* அதன் பின் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒருமுறை பயன்படுத்தி வர, முகம் மென்மையாகவும், பட்டுப்போன்றும், பளிச்சென்றும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications