உங்க சருமத்தின் நிறத்தை அதிகரிக்கணுமா? அப்ப பீட்ரூட்டை இப்படி யூஸ் பண்ணுங்க...

Skin Care Tips In Tamil: ஒவ்வொருவருக்குமே வெள்ளையான மற்றும் பொலிவான சருமத்தைப் பெற வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக நிறைய பேர் கடைகளில் விற்கப்படும் விலையுயர்ந்த நிறைய சரும பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்துவர்.

ஆனால் இப்படி விலை அதிகமான சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தினால் தான் சருமத்தின் நிறம் அதிகரிக்கும் என்று நினைக்கின்றனர். ஆனால் இயற்கை நமக்கு அளித்த சில பொருட்களும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் என்பது தெரியுமா? அப்படிப்பட்ட ஒரு அற்புதமான பொருள் தான் பீட்ரூட்.

Skin Care Tips How To Use Beetroot For Pink Glow On Face

அடர் பிங்க் நிறத்தில் இருக்கும் பீட்ரூட்டைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், உடனடியாக சருமத்தின் நிறம் மேம்படுவதோடு, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு பீட்ரூட்டைக் கொண்டு ஃபேஸ் பேக்கை போட வேண்டும். கீழே சரும நிறத்தை மேம்படுத்த உதவும் சில பீட்ரூட் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. பீட்ரூட், தேன் அல்லது தயிர்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பீட்ரூட் ஜூஸை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 1 டீஸ்பூன் தேன் அல்லது தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் 1-2 முறை பயன்படுத்தினால், முகம் பளிச்சென்றும், பிரகாசமாகவும் இருக்கும்.

2. பீட்ரூட், சர்க்கரை மற்றும் தேன்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் சிறிது பீட்ரூட் ஜூஸை எடுத்து, அத்துடன் சர்க்கரை மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, சில நிமிடங்கள் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை போடுவதன் மூலம் முகம் பிரஷ்ஷாகவும், பளிச்சென்றும் இருக்கும்.

3. பீட்ரூட் ஐஸ் க்யூப்ஸ்

* காலையில் எழும் போது உங்கள் முகம் அடிக்கடி வீக்கமடையுமா? அப்படியானால் பீட்ரூட் ஐஸ் கட்டிகளை பயன்படுத்துங்கள்.
* அதற்கு பீட்ரூட்டை சிறிது நீரை ஊற்றி அரைத்து, ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீசரில் இரவு முழுவதும் வைக்க வேண்டும்.
* மறுநாள் காலையில் அதை ஒரு துணியில் வைத்து, முகத்தில் 5-6 நொடிகள் மசாஜ் செய்ய வேண்டும்.
* இப்படி செய்வதனால் முகம் பளிச்சென்று பிரகாசமாவதோடு, சருமமும் இறுக்கமடையும்.

4. பீட்ரூட் மற்றும் ரோஸ் வாட்டர்

* உங்கள் முகம் டல்லாக இருந்தால், பீட்ரூட் ஜூஸை எடுத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, காலை வேளையிலும், இரவு தூங்கும் முன்பும் முகத்தில் ஸ்ப்ரே செய்ய வேண்டும்.
* இப்படி தினமும் செய்து வந்தால், முகம் புத்துணர்ச்சியாகவும், பொலிவோடும் இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, August 29, 2025, 21:17 [IST]
Desktop Bottom Promotion