Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
அக்குள் கருப்பா இருக்கா? அப்ப தினமும் நைட் கற்றாழை ஜெல்லை இந்த பொருளுடன் கலந்து யூஸ் பண்ணுங்க..
Skin Care Tips In Tamil: இன்று நிறைய பேர் அக்குள் கருமை பிரச்சனையை சந்திக்கிறார்கள். உங்கள் அக்குள் கூட கருமையாக உள்ளதா? அக்குளை வெள்ளையாக்க பலவிதமான லோஷன் அல்லது க்ரீம்களை வாங்கி பயன்படுத்துகிறீர்களா?
இருப்பினும் எந்த பலனும் கிடைக்கவில்லையா? அப்படியானால் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் அக்குளில் உள்ள கருமையைப் போக்க பெரும்பாலானோரின் வீடுகளில் உள்ள கற்றாழை ஜெல்லே நல்ல பலனைத் தரும்.

கற்றாழை ஜெல்லானது பலவிதமான சரும பிரச்சனைகளை இயற்கையாகவே சரிசெய்யும் திறன் கொண்டது. இதனால் தான் பலவிதமான சரும பராமரிப்பு பொருட்களில் கற்றாழை ஜெல் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
நீங்கள் உங்கள் அக்குள் கருமையை எளிய வழியில் போக்க நினைத்தால், கற்றாழையைப் பயன்படுத்துங்கள். கீழே அக்குள் கருமையைப் போக்க கற்றாழையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
வழி #1
* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் காபி பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 2-3 துளிகள் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த கலவையை அக்குகளில் தடலி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் அக்குளைக் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் இரவு செய்து வந்தால், அக்குள் கருமை விரைவில் மறையும்.
வழி #2
* ஒரு பௌலில் 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 4-5 துளிகள் ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை அக்குளில் தடவி, குறைந்தது 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் வெதுவெதுப்பான நீரால் அக்குளை கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் மேற்கொண்டு வந்தால், அக்குளில் இருக்கும் கருமை போகத் தொடங்கும்.
வழி #3
* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் 4 துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை அக்குளில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் வெதுவெதுப்பான நீரால் அக்குளை கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று வழிகளுமே அக்குளில் இருக்கும் கருமையைப் போக்க பெரிதும் உதவி புரியும் கற்றாழை பேக்குகள் ஆகும். அக்குள் கருமையைப் போக்க நினைப்பவர்கள், இவற்றுள் ஒன்றை தினமும் தவறாமல் பயன்படுத்தி வந்தால், நிச்சயம் விரைவில் அக்குளை வெள்ளையாக்கலாம்.



Click it and Unblock the Notifications