Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்க முகம் டல்லா இருக்கா? அப்ப தயிருடன் இந்த 2 பொருளை கலந்து ஃபேஸ் பேக் போடுங்க.. முகம் பிரகாசிக்கும்...
Skin Care Tips In Tamil: இந்தியர்களின் தினசரி உணவில் இடம் பெறும் முக்கியமான உணவுப் பொருள் தான் தயிர். இந்த தயிர் சுவையானது மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல்வேறு சத்துக்களைக் கொண்டது. ஆனால் இந்த தயிர் ஒருவரது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவி புரியும் என்பது தெரியுமா?
தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் இருப்பதால், அவற்றைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுக்கும் போது, சரும பொலிவு அதிகரிக்கும். மேலும் தயிரில் உள்ள புரோட்டீன்கள், கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்றவை சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகின்றன. அதோடு, தயிரைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுக்கும் போது, சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் நீங்கும்.

எனவே நீங்கள் உங்கள் சரும அழகை இயற்கை வழியில் மேம்படுத்த விரும்பினால், தயிரைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுங்கள். சரி, தயிரைக் கொண்டு எப்படி பராமரிப்பைக் கொடுப்பது என்று கேட்கலாம். தயிரை சருமத்திற்கு பயன்படுத்த சிறந்த வழி ஃபேஸ் பேக் தான்.
கீழே சரும பொலிவை அதிகரித்து, சருமத்தை சுத்தமாகவும் வெள்ளையாகவும் மாற்ற உதவும் சில தயிர் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கேற்றதைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தி நன்மை பெறுங்கள்.
1. தயிர், தேன் ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை போடுவதால் சருமச் செல்கள் நல்ல ஊட்டம் பெற்று, சருமம் ஆரோக்கியமாக காட்சியளிக்கும்.
2. தயிர், ஆரஞ்சு தோல் ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 2 டீஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடி, 1 டேபிள் ஸ்பூன் தேன், 1 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு பொடி மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தி வந்தால், முகப்பருக்கள் நீங்குவதோடு, சருமமும் பளிச்சென்று பிரகாசமாக ஜொலிக்கும்.
3. தயிர் மற்றும் வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் வெள்ளரிக்காய் சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் ஒருமுறை பெயன்படுத்தி வந்தால், சருமம் புத்துணர்ச்சியுடன் காட்சியளிக்கும்.
4. தயிர் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன், 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள கருமை மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.
5. தயிர் மற்றும் ஆலிவ் ஆயில் ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 4 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள சுருக்கம் மறையத் தொடங்கி, சருமம் இளமையாக காட்சியளிக்கும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள தயிர் ஃபேஸ் பேக்குகள் சரும அழகை மேம்படுத்துவதோடு, சரும பிரச்சனைகளைப் போக்கும் திறன் கொண்டவை. எனவே உங்கள் முகம் பிரகாசமாகவும், வெள்ளையாகவும் காட்சியளிக்க வேண்டுமானால், தயிர் ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்துங்கள்.



Click it and Unblock the Notifications