Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்க முகம் ரொம்ப வறண்டு சொரசொரன்னு இருக்குதா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்குகளை போடுங்க...
Skin Care Tips In Tamil: காலநிலை மாற்றம், மாசுபாடு போன்றவற்றால் சருமம் பொலிவிழந்து போவதோடு, சருமமும் அதிகம் வறண்டு போகிறதா? அப்படியானால் சருமத்திற்கு வழக்கத்தை விட அதிகமாக பராமரிப்பை கொடுக்க வேண்டும் என்று அர்த்தம்.
நிறைய பேர் மழை காலத்தில் சருமத்திற்கு நிறைய பராமரிப்பு கொடுக்க தேவையில்லை என்று நினைக்கலாம். ஆனால் மற்ற காலங்களைப் போன்றே குளிர்ச்சியான காலங்களிலும் சருமத்தில் பாதிப்புகளும், பிரச்சனைகளும் அதிகம் ஏற்படும். இந்நிலையில் போதுமான பராமரிப்புக்களைக் கொடுத்தால் தான் முகம் பளிச்சென்று அழகாகவும், பிரகாசமாகவும், பொலிவோடும் இருக்கும்.

அதுவும் சருமத்திற்கு ஊட்டமளிக்கும் மற்றும் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த ஃபேஸ் மாஸ்க்குகளை போட வேண்டும். கீழே சரும வறட்சியை போக்கும் மற்றும் சரும பொலிவை அதிகரிக்க உதவும் சில ஃபேஸ் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. தேன் மற்றும் தயிர் ஃபேஸ் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவ வேண்டும்.
* பின்பு 15-20 நிமிடம் நன்கு ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க் சரும வறட்சியை போக்கி, நல்ல பொலிவைத் தரும்.
2. அவகேடோ மற்றும் ஆலிவ் ஆயில் ஃபேஸ் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த பாதி அவகேடா பழத்தை மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
3. வாழைப்பழம் மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4. கற்றாழை மற்றும் வெள்ளரிக்காய் ஃபேஸ் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு பாதி வெள்ளரிக்காயை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்திற்கு நல்ல குளிர்ச்சியை தருவதோடு, சருமத்தை இறுக்கமடையச் செய்யும்.
5. ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் ஃபேஸ் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் கிளிசரினை எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் மாஸ்க்குகளை குளிர்ச்சியான காலக்கட்டத்தில் பயன்படுத்தினால், சருமம் வறண்டு போகாமல், நீரேற்றத்துடனும், அழகாகவும், பொலிவோடும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications