Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
எப்பவுமே பளிச்சுன்னு அழகா தெரியணுமா? அப்ப வார இறுதியில் இந்த ஃபேஸ் பேக்குகளை போடுங்க..
Skin Care Tips In Tamil: உங்கள் முகம் எப்போதும் பொலிவிழந்து இருக்கிறதா? உங்கள் முகம் எப்போதும் பளிச்சென்று பிரகாசமாக இருக்க வேண்டுமா? அப்படியானால் சருமத்திற்கு அடிக்கடி ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க், ஸ்க்ரப் போன்றவற்றை பயன்படுத்துங்கள்.
இப்படி பயன்படுத்தும் போது சருமத்தில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள், அதிகப்படியான எண்ணெய் போன்றவை வெளியேற்றப்பட்டு, முகம் பளிச்சென்று இருக்கும். அதுவும் தற்போதைய பரபரப்பான உலகில் வார நாட்களில் வேலையை முடிக்கவே நேரம் போதவில்லை, எங்கு சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்க நேரம் இருக்கிறது என்று சொல்லலாம்.

ஆனால் தினமும் சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்க முடியாவிட்டாலும், வார இறுதி நாட்களில் ஒருசில ஃபேஸ் பேக்குகளை போட்டு வந்தால், எப்போதும் முகத்தை அழகாகவும், பிரகாசமாகவும் வைத்துக் கொள்ளலாம். இப்போது வார இறுதியில் போட வேண்டிய சில ஃபேஸ் பேக்குகள் குறித்து காண்போம்.
1. தேன் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சரும வறட்சியைப் போக்கி, சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவும்.
2. ஓட்ஸ் மற்றும் வாழைப்பழ ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு 15-20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தையும் வெளியேற்றும்.
3. மஞ்சள் மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, ரோஸ் வாட்டர் அல்லது தயிர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும்.
4. வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு பிளெண்டரில் பாதி வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி சேர்த்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வேண்டும்.
* பிறகு குளிர்ந்த முகுத்தைக் கழுவ வேண்டும்.
5. பப்பாளி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு சிறிது நன்கு கனிந்த பப்பாளி பழத்தை எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, சருமத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications