Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்..
உங்க முகம் பொலிவிழந்து கருப்பா இருக்கா? அப்ப மைதா வெச்சு வாரம் 1 முறை இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
Skin Care Tips In Tamil: உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்தால் டல்லாக காட்சியளிக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் முகத்தில் இறந்த செல்களும், அழுக்குகளும் அதிகம் தேங்கியிருக்க வாய்ப்புள்ளது. எப்போது ஒருவரது முகத்தில் அழுக்குகள் அதிகம் தேங்குகிறதோ, அப்போது அந்நபரின் முகம் கருப்பாகவும், பொலிவிழந்தும் காணப்படும். இந்நிலையில் சருமத்திற்கு முறையான பராமரிப்புக்களை தவறாமல் கொடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால், வேறு பல சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த ஃபேஸ் பேக்குகளை வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக, நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போன்ற சரும பராமரிப்புக்களை மேற்கொள்வதன் மூலம், முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு, முகமும் பளிச்சென்று பிரகாசமாக காட்சியளிக்கும்.

அப்படி சருமத்தின் பொலிவை மேம்படுத்தும் ஏராளமான பொருட்கள் நம் சமையலறையில் உள்ளன. அதில் ஒன்று தான் மைதா. சுத்திகரிக்கப்பட்ட மைதா மாவைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வருவதனால், சருமத்தின் கொலாஜன் உற்பத்தி மேம்படுவதோடு, முகம் இன்னமும் பிரகாசமாக காட்சியளிக்கும். அதோடு இந்த மைதா ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போட்டு வந்தால், சருமம் மென்மையாகவும், இளமையாகவும் இருக்கும். இப்போது சரும பொலிவை மேம்படுத்தும் சில மைதா ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.
1. மைதா, எலுமிச்சை, மஞ்சள் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை எடுத்து, அத்துடன் 3 டேபிள் ஸ்பூன் மைதா மாவு மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தி வந்தால், ப்ளீச்சிங் செய்தது போன்று முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும்.
2. மைதா, கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் மைதா, 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை போடுவதன் மூலம், சருமம் மென்மையாகவும், பளிச்சென்று பிரகாசமாகவும் இருப்பதோடு, முதுமைக்கான அறிகுறிகளும் தடுக்கப்படும்.
3. மைதா, மஞ்சள் தூள் மற்றும் ஆலிவ் ஆயில்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் மைதா மாவை எடுத்து, அத்துடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் சில துளிகள் ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4. மைதா மற்றும் தயிர்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் மைதா மாவை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் குளிர்ந்த தயிரை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சரும நிறத்தை மேம்படுத்த பெரிதும் உதவும்.
5. மைதா, தேன் மற்றும் பால்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் மைதா மாவு, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி ஃபேஸ் பேக் போடுவதன் மூலம், முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications