Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
உங்க முகம் டல்லா இருக்கா? அப்ப உங்க சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் பேக்கை வாரம் 1-2 முறை போடுங்க...
Skin Care Tips In Tamil: உங்கள் முகம் நாளுக்கு நாள் மிகவும் டல்லாகிக் கொண்டிருக்கிறதா? அப்படியானால் உங்கள் சருமத்தில் இறந்த செல்கள் அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. அதுவும் வறண்ட சருமத்தினர் அல்லது வெயிலில் அதிகம் சுற்றுபவர்களுக்கு, இறந்த செல்கள் அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் இத்தகையவர்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க முயற்சிக்க வேண்டும்.
அதற்கு முகத்திற்கு சோப்பு அல்லது ஃபேஷ் வாஷ் கொண்டு முகத்தை கழுவினால் மட்டும் போதாது, சருமத்திற்கு போதுமான பராமரிப்புக்களை கொடுக்க வேண்டும். அதுவும் ஃபேஸ் பேக்குகளைப் போட வேண்டும். முக்கியமாக இயற்கை பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக்குகளை போட்டு வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.

முக்கியமாக ஒருவர் தங்களின் சரும வகைக்கு ஏற்ப ஃபேஸ் பேக்குகளை போட்டால் தான் முழு பலனைப் பெற முடியும். கீழே முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கானதை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.
1. சாதாரண சருமத்தினருக்கு ஏற்ற ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
* ஓட்ஸ் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
* தேன் - 1 டீஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் ஓட்ஸ் பவுடர், தயிர் மற்றும் தேனை ஒன்றாக எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு முகத்தை மென்மையாக மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* பின்னர் முகத்தை துடைத்துவிட்டு, மறக்காமல் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.
2. வறண்ட சருமத்தினருக்கான ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
* அவகேடோ - 1
* தேன் - 1 டேபிள் ஸ்பூன்
* ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த அவகேடோ பழத்தை மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் தேன் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும்.
* பிறகு 15-20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தி, மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
* பின்னர் முகத்தை துடைத்துவிட்டு, மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும்.
3. எண்ணெய் பசை சருமத்தினருக்கான ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
* பென்டோனைட் க்ளே - 1 டேபிள் ஸ்பூன்
* ஆப்பிள் சீடர் வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
* டீ-ட்ரீ ஆயில் - 1 துளி
பயன்படுத்தும் முறை:
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் பென்டோனைட் க்ளே மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் வேண்டுமானால் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதை முகத்தில் தடவ வேண்டும். முக்கியமாக கண்களைச் சுற்றி தடவ வேண்டாம்.
* பின் 10-15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
4. காம்பினேஷன் சருமத்தினருக்கான ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
* தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
* மசித்த பப்பாளி - 1 டேபிள் ஸ்பூன்
* தேன் - 1 டீஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் தயிர், மசித்த பப்பாளி மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி, மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
* பிறகு சருமத்தை துடைத்துவிட்டு, லைட்வெயிட் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் பேக்குகளை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தலாம். உங்களுக்கு எந்த வகை சருமமோ, அதற்கேற்ப ஃபேஸ் பேக்கை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி நன்மை பெறுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications