Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இன்று தனது 38 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ஸ்ருதிஹாசனின் அழகு ரகசியத்தை தெரிஞ்சுக்கணுமா?
Shruti Haasan Birthday Special: பிரபல நடிகையும், பாடகியுமான ஸ்ருதி ஹாசன் இன்று தனது 38 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய தொழிகளின் திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் வெளிவந்த நடிகர் பிரபாஸ் நடித்து வெளிவந்த 'சலார்' என்னும் திரைப்படத்தின் நடிகையும் இவரே ஆவார். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் மகளும் கூட.
எப்போதும் மிகவும் ஃபிட்டாகவும், பளபளப்பான சருமத்தையும் கொண்டுள்ள நடிகைளுள் ஒருவர் தான் ஸ்ருதிஹாசன். பொதுவாக பெண்கள் நடிகைகளைப் போன்று நல்ல பளபளப்பான மற்றும் மென்மையான சருமத்தைப் பெற விரும்புவார்கள். அதற்காக நடிகைகளின் அழகு ரகசியங்களைத் தெரிந்து கொள்ள நினைப்பார்கள்.

2024 ஜனவரி 28 ஆம் தேதி ஸ்ருதிஹாசன் தனது 38 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளதால், இவரது பிறந்தநாளை முன்னிட்டு நடிகை ஸ்ருதிஹாசனின் அழகு ரகசியங்கள் என்னவென்பதைக் காண்போம்.
1. கற்றாழை
பல இன்டர்வியூக்களில், ஸ்ருதிஹாசன் தனது சரும பராமரிப்பில் கட்டாயம் இடம் பெறும் ஒரு நேச்சுரல் பொருள் என்றால், அது கற்றாழை தான் என்று கூறியுள்ளார். இவரது மென்மையான பட்டுப் போன்ற சருமத்திற்கு காரணம், கற்றாழைக் கொண்டு தினமும் போடும் ஃபேஸ் பேக்குகள் தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.
2. சாலிசிலிக் அமிலம்
சாலிசிலிக் அமிலம் சருமத்தில் உள்ள வீக்கம் மற்றும் அழற்சியைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது சருமத்துளைகளில் உள்ள அடைப்புக்களை நீக்குவதோடு, சருமத் துளைகளில் உள்ள அழுக்குகளை வெளியற்றி, சருமத் துளைகளை சுருக்கும். அப்படிப்பட்ட சாலிசிக் அமிலத்தை தினமும் சருமத்திற்கு சரியான முறையில் பயன்படுத்தி வந்தால், சருமத்தில் வரக்கூடிய முகப்பரு பிரச்சனையைத் தடுக்கலாம். இந்த சாலிசிலிக அமிலத்தையும் ஸ்ருதிஹாசன் பயன்படுத்துவாராம்.
3. உருளைக்கிழங்கு ஜூஸ்
ஸ்ருதிஹாசன் தனது சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய இயற்கை வழிகளைத் தான் மேற்கொள்வாராம். அதுவும் முகத்தில் ஏற்படும் கருமைகள், சீரற்ற சரும நிறம் போன்றவற்றை சரிசெய்ய உருளைக்கிழங்கு சாற்றினைப் பயன்படுத்துவாராம். இந்த உருளைக்கிழங்கு சாறு அவரது சருமத்தில் மாயங்களைப் புரிவதாக ஸ்ருதிஹாசன் கூறுகிறார்.
4. தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்றது மற்றும் இது முகப்பரு மற்றும் பிற சரும பிரச்சனைகளைப் போக்க வல்லது. தேங்காய் எண்ணெயில் காணப்படும் லாரிக் அமிலம் சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களை அழிப்பதோடு, அழற்சியைக் குறைக்கிறது. மேலும் இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
5. படுக்கைக்கு முன் மேக்கப்பை நீக்குவது
ஸ்ருதிஹாசன் எப்போதும் இரவு தூங்கும் முன் தவறாமல் மேக்கப்பை நீக்கிவிட்டு தான் தூங்குவாராம். மேக்கப்புடன் தூங்கினால், அது சரும செல்களை சேதப்படுத்துவதோடு, முகப்பரு மற்றும் பிற சரும பிரச்சனைகளை வரவழைத்துவிடும். எனவே நீங்கள் மேக்கப் போடுபவராயின், உங்கள் அழகை பராமரிக்க விரும்பினால், தினமும் இரவு தூங்கும் முன் மேக்கப்பை நீக்கிவிட்டு, மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும். இதனால் சருமம் வறண்டு போகாமல் ஈரப்படத்துடன் இருக்கும்.



Click it and Unblock the Notifications