'ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்லுறியா' சமந்தாவின் கவர்ந்திழுக்கும் அழகிற்கு என்ன காரணம் தெரியுமா?

Samantha Beauty Secrets In Tamil: தென்னிந்திய நடிகையான சமந்தாவின் அழகை பற்றி பேசாதா அல்லது வியக்காத ஆட்களே இல்லை எனலாம். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெறி, கத்தி, ஓ பேபி, சூப்பர் டீலக்ஸ், அஞ்சான், மெர்சல், காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் நீதானே என் பொன் வசந்தம் போன்ற படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்துள்ளார்.

அழகான பொலிவான தோற்றம் கொண்ட சருமத்தாலும், வடிவான உடலமைப்பினாலும், தன் திறமையான நடிப்பினாலும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார். சமந்தாவின் இருக்கும் அழகில் மயங்காத ஆட்களே இல்லை. சமந்தா ஒரு இயற்கை அழகு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் தனது தோல் மற்றும் கூந்தலை பராமரிக்க நிறைய முயற்சிகளை செய்து வருகிறார்.

Samantha Ruth Prabhu Beauty Secrets In Tamil

சமந்தா மேக்கப்பிலிருந்து விலகி இயற்கையாகவே அழகாக சருமத்தை வைத்திருக்க விரும்புகிறார். திரையில் கூட, அவர் வழக்கமாக இயற்கையான மேக்கப்பையே கொண்டிருப்பார். அனைவரையும் கவரும் உடலமைப்பு, எல்லாரையும் எளிதில் இருக்கும் நேர்த்தியான சரும அழகால் சமந்தா அழகாக ஜொலிக்கிறார். புடவை முதல் மாடன் ட்ரெஸ் வரை எந்த ஆடை அணிந்தாலும், அவரின் தோற்றத்திற்கு கச்சிதமாக இருக்கும்.

சமந்தா தனது நாளை ஆப்பிள் சைடர் வினிகருடன் தொடங்குகிறார், மேலும் அவர் அதை கொலாஜன் ஷாட் மூலம் முடிக்கிறார். ஆப்பிள் சைடர் வினிகரை சரும பராமரிப்பில் முக்கியமானது. இதன் பயன்பாடு, குறிப்பாக, சருமத்தை இறுக்கி, தீங்கு விளைவிக்கும் சுற்றுச்சூழல் கூறுகளிலிருந்து பாதுகாக்க உதவும்.

சருமத்தை பாதுகாக்க தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. சமந்தா நாள் தவறாமல் தினமும் சன்ஸ்கிரீனை பயன்படுத்தி வருகிறார். அவரின் ஜொலிக்கும் சருத்திற்கு இதுவும் ஒரு காரணம்.

சூட்டிங்கின்போது சரியாக தூங்காமல் இருப்பதாலோ அல்லது படத்தில் நடிக்க மேக்-அப் பயன்படுத்தவும்போது, கண்களில் வீக்கம் ஏற்படலாம். வீங்கிய கண்களை சமாளிக்க சமந்தா ஜெல் பேட்ச்களைப் பயன்படுத்துகிறார்.

தினமும் உடற்பயிற்சி, தியானம் மற்றும் யோகா செய்கிறார். வழக்கமாக தியானம் செய்வது அவருக்கு இயற்கையான பிரகாசத்தை வழங்க உதவும். மேலும், இது அழகான வடிவமைப்பான உடலை பெறவும் உதவுகிறது.

சமந்தா உணவு தேர்வுகளில் மிகவும் கவனமாக இருக்கிறார். எண்ணெய் உணவுகளை முற்றிலும் தவிர்க்கிறார். புதிய காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட அதிக விரும்புவார். மேலும், அவர் வீட்டில் சமைத்த உணவையே அதிகம் சாப்பிட விரும்புவார்.

தனது பளபளப்பான சருமத்தின் பின்னணியில் உள்ள ஒரு முக்கியமான ரகசியத்தை பற்றி சமந்தா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். அது ஃபேஷியல் ஸ்டீமிங். ஸ்டீமிங்க் என்பது முகத்திற்கு ஆவி பிடிப்பது. இதனால், சருமம் பொலிவாகவும் பளபளப்பாகவும் இருப்பதாக அவர் கூறுகிறார். இந்த அழகு குறிப்புகளை பின்பற்றி நீங்களும் சமந்தா போல அழகாக ஜொலிக்கலாம்.

Desktop Bottom Promotion