Latest Updates
-
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க...
ஈரத்தலையுடன் தூங்குவீங்களா? அப்ப இனிமேல் அந்த தப்பை பண்ணாதீங்க.. ஏன்னு பாருங்க...
Sleeping With Wet Hair In Tamil: ஈரமான கூந்தலை பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. சில சமயங்களில் நாம் செய்யும் சிறிய சிறிய தவறுகள் நமக்கு கூந்தல் பிரச்சினைகளை உண்டு பண்ணுகிறது.
சிலர் ஈரமான கூந்தலுடன் தூங்குவது, ஈரமான கூந்தலில் தலையை வாருவது போன்ற விஷயங்களை செய்வது உண்டு. இதனால் கடுமையான கூந்தல் உதிர்வை அவர்கள் சந்திக்கின்றனர்.

ஈரமான கூந்தலுடன் தூங்குவது உங்கள் மயிர்க்கால்கள் பலவீனம் அடைந்து கூந்தல் உதிர்வு பிரச்சினை ஏற்படுகிறது. ஈரமான கூந்தலுடன் தூங்கும் போது அவை நீங்கள் பயன்படுத்தும் தலையணைகள் மற்றும் படுக்கைகளால் பாதிப்படைந்து உடைந்து போகிறது.
எனவே ஈரமான கூந்தலுடன் தூங்குவதால் எந்த மாதிரியான பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
ஈரமான கூந்தலுடன் தூங்குவதால் ஏற்படும் பிரச்சினைகள்:
ஈரமான கூந்தலுடன் தூங்கும் போது படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது நீங்கள் அதிகமான சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். நம் ஒவ்வொரு முடியும் புரதங்கள் மற்றும் உயிரணுக்களால் ஆனது. ஈரமான முடியில் புரதங்களின் பிணைப்பு வலிமை குறைந்து இருக்கும். இதனால் உங்கள் கூந்தல் உடைந்து போக அதிக வாய்ப்பு உள்ளது.
ஈரமான கூந்தலுடன் தூங்கும் போது உங்கள் முடி 30% பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. நம் முடியின் ஒவ்வொரு இழைகளிலும் க்யூட்டிகல் எனப்படும் மிருதுவான செதில் காணப்படுகிறது. இந்த செதிலின் மேற்புறத்தில் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை ஹைட்ரோபோபிக் அல்லது ஈரமாக இருக்கும் போது தண்ணீரை உறிஞ்ச வாய்ப்பு உள்ளது.
இதனால் முடியிழைகள் வீங்கி அதன் ஒட்டுமொத்த கட்டமைப்பும் பலவீனமாகிறது. இதனால் ஈரமான கூந்தலுடன் நீங்கள் தூங்கும் போது கூந்தல் உதிர்தல் பிரச்னை ஏற்படலாம். ஈரமான கூந்தல் தலையணையில் உராயும் போதும் உங்களுக்கு கூந்தல் உடைந்து போதல் ஏற்பட வாய்ப்புள்ளது.
உச்சந்தலை தொற்று
சிலருக்கு ஈரமான கூந்தலுடன் தூங்குவது உச்சந்தலையில் தொற்று ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. உச்சந்தலையில் பூஞ்சை தொற்று ஏற்பட்டு கூந்தல் உதிர்தல் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
* ரிங்வார்ம்: ரிங்வார்ம் என்பது ஈரப்பதமான சூழலில் செழித்து வாழும் ஒரு பூஞ்சை மற்றும் டினியா கேபிடிஸ் ஆகும். இது உங்களுக்கு உச்சந்தலை நோயை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் தலையில் அரிப்பு மற்றும் முடி உதிர்தல் ஏற்படும். தலையில் கருப்பு புள்ளிகளுடன் வழுக்கை திட்டுகள் வர வாய்ப்புண்டு.
* மலாசீசியா: மலாசீசியா என்பது மயிர்க்கால்களில் ஏற்படுகிறது. இது டெர்மடிடிஸ் எனப்படும் தோல் நோயுடன் தொடர்புடையது. இதனால் உச்சந்தலையில் பொடுகு, தோலில் மஞ்சள் திட்டுகள் போன்றவை ஏற்படுகிறது.
* ஆஸ்பெர்கில்லோசிஸ்: இது தலையணையில் இருக்கும் ஒரு வகை பூஞ்சை ஆகும். இந்த பூஞெசையும் உங்களுக்கு உச்சந்தலையில் தொற்று நோயை ஏற்படுத்தும். இதனால் சிலருக்கு தீவிர சுவாசக் கோளாறு பிரச்சினைகள் ஏற்படலாம்.
பிற பிரச்சனைகள்...
* ஈரமான கூந்தலுடன் தூங்கும் போது உங்களுக்கு பொடுகு தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் தலையணை உங்கள் தலையில் உள்ள ஈரப்பதம் மற்றும் எண்ணெயை உறிஞ்சி கூந்தலை வறட்சியாக்கி விடும். இதனால் நீங்கள் பொடுகுத் தொல்லையை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
* ஈரமான கூந்தலுடன் தூங்கும் போது உங்கள் கூந்தலில் உள்ள இயற்கையான ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு பொலிவிழந்து போக வாய்ப்புள்ளது.
* ஈரமான கூந்தலுடன் தூங்கும் போது உங்களுக்கு சலதோஷம் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஈரமான கூந்தலுடன் தூங்கும் போது சுவாச பாதையில் தொற்று ஏற்பட்டு சலதோஷம் உண்டாக வாய்ப்புள்ளது.
கூந்தலை பராமரிக்க டிப்ஸ்கள்:
* பருத்தி தலையணையை விட பட்டு தலையணை உங்களுக்கு குறைந்த உராய்வை தருகிறது. எனவே இதனால் முடி உதிர்தல் குறைகிறது.
* தலைக்கு எண்ணெய் வைப்பது மிகவும் அவசியம். இதன் மூலம் கூந்தல் சேதத்தில் இருந்து உங்களை பாதுகாக்க முடியும். இது முடியில் உள்ள புரத இழப்பை குறைக்கிறது. ஆர்கான் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி வாருங்கள்.
* நீங்கள் தூங்குவதற்கு முன்பு கூந்தலை நன்றாக உலர்த்துவது அவசியம். ஹேர் ட்ரையர் அல்லது இயற்கையாக கூந்தலை உலர்த்தி காய வையுங்கள். இதன் மூலம் கூந்தல் சேதத்தை தடுக்க முடியும்.



Click it and Unblock the Notifications