Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
'ரஞ்சிதமே' ராஷ்மிகாவின் மனதை கவரும் பளபளப்பான சருமத்திற்கான ரகசியம் என்ன தெரியுமா?
Rashmika Mandanna's Beauty Tips In Tamil: பெரும்பாலான மக்கள் குறைபாடற்ற ஒளிரும் சருமத்தை பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதிலும் பெண்கள் நடிகைகள் போல தங்கள் சருமம் அழகாக ஜொலிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே இயற்கையாகவே ஒளிரும் சருமம் உள்ளது. அவர்களில் நடிகை ராஷ்மிகாவும் ஒருவர்.
ராஷ்மிகா மந்தனா போல பளபளக்கும் சருமத்தை பெற சில பயனுள்ள குறிப்புகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். அனைவரையும் கவரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தனது அழகு ரகசியங்கள் மற்றும் தோல் பராமரிப்பு முறையைப் பற்றி பகிர்ந்துள்ளார். அவரைப் போல பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெறுவது எப்படி என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

தமிழ், தெலுங்கு, கன்னடா திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வரும் ராஷ்மிகா தன் அழகாலும் திறமையாலும் தனக்கென ஓர் தனி இடத்தை பிடித்துள்ளார். கீதா கோவிந்தம், வாரிசு, டியர் காம்ரெட், புஷ்பா போன்ற படங்களில் நடித்துள்ள ராஷ்மிகாவிற்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அனைவரையும் எளிதில் ஈர்க்கும் அழகான பொலிவான சருமத்தை கொண்டிருக்கும் இவர், இளைஞர்கள் மனதில் நீங்க இடம் பிடித்திருக்கிறார்.
ராஷ்மிகா மந்தனா இயற்கை அழகையே பெரிதும் விரும்புவார். அவரை பொறுத்தவரை, அழகு என்பது மேலோட்டமானதல்ல, அது உள்ளிருந்து உருவாகும் ஒன்று என நினைக்கிறார். அதனால், சருமத்தை உள்ளிருந்து ஜொலிக்க வைக்க இயக்கையான வழிமுறைகளையே அவர் பின்பற்றி வருகிறார். எப்போதும் நம்பிக்கையுடனும் புத்துணர்ச்சியுடனும் இவர் இருக்கிறார்.
ராஷ்மிகாவின் சிறுவதில், அவரது பாட்டி சமையலறையிலிருந்து அரிசி பேஸ்ட் மற்றும் மஞ்சள் போன்ற இயற்கையான பொருட்களை கொண்டு ஃபேஸ் பேக் தயாரித்து கொடுப்பார்களாம். அதனால் இயற்கை பொருட்களை மட்டுமே அவர் சருமத்திற்கு பயன்படுத்துவாராம். இது அவரது ஜொலிக்கும் சருமத்திற்கான ரகசியம்.
தண்ணீர் குடித்து நீரேற்றம் செய்வதன் மூலம் தனது நாளைத் தொடங்கிறார் ராஷ்மிகா. தங்களை நீரேற்றமாக வைத்திருப்பதன் மூலம் சருமம் புத்துணர்ச்சியாகவும் பளபளப்பாகவும் இருக்கும். மேலும், அவர் தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி மற்றும் ரன்னிங் செய்கிறார். இதனால், உடல் வடிவமாகவும் சருமம் பொலிவாகவும் இருக்கும்.
தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குகிறார். தூக்கம் நம் சரும ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டுள்ளது. தூங்குவதற்கு முன்பு முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் சோர்வு அனைத்தையும் போக்க முகத்தை சுத்தப்படுகிறார். அதைத் தொடர்ந்து நைட் கிரீம் அல்லது மாய்ஸ்சரைசரை பயன்படுத்துகிறார். சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்துக்கொள்கிறார்.
எண்ணெயில் பொரித்த மற்றும் பதப்படுத்தப்பட்ட ஆரோக்கியமற்ற உணவுகளை முற்றிலும் தவிர்க்கும் ராஷ்மிகா, ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்கிறார். உணவுக்கு இடையில் பழங்கள் மற்றும் நட்ஸ்களை சாப்பிடுகிறார். மேலும், சருமத்தை எண்ணெய் பசையாக்கும் உணவுகளையும் அவர் தவிர்க்கிறார்.
வேலை நாளுக்குப் பிறகு, அவர் தனது சருமத்திலுள்ள அழகு சாதனப் பொருட்களை நீக்கிவிட்டு, முகத்தை நன்றாக சுத்தம் செய்கிறார். முகத்தில் வேறு எதையும் பயன்படுத்தமால் சருமத்தை சுவாசிக்க வைக்கிறார். வெளியில் செல்லும்போது, கட்டாயம் சன்ஸ்கிரீன் அணிந்து செல்கிறார். சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீன் அவசியம். அதனால், சன்ஸ்கிரீன் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதை அவர் தவிர்க்கிறார்.
சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், நல்ல வைட்டமின் சி சீரம் மூலம் சருமத்தை ஊட்டமளிப்பதும் அவசியம். உங்கள் சருமத்திற்கு ஏற்ற சீரமை பயன்படுத்த ராஷ்மிகா பரிந்துரைக்கிறார். முகத்தை சுத்தமாக வைத்திருப்பது இன்றியமையாதது. அதனால், ஒரு நாளைக்கு இரண்டு முறை அவர் தனது முகத்தை கழுவுகிறார்.
மேலே குறிப்பிட்டுள்ள ராஷ்மிகாவின் சரும பராமரிப்பு குறிப்புகளை பின்பற்றி, நீங்களும் பளபளக்கும் ஜொலிக்கும் சருமத்தை பெறலாம்.



Click it and Unblock the Notifications

